Tuesday, July 12, 2022

Mohamed Sabry

 

உள்ளத்துக்கு நெருக்கமான நண்பர் தீரன் ஆர் எம் நெளசாத் சூஃபிசக் கவிதைகள் தொகுதி கிடைத்தது.
முத்திரையிடப்பட்ட மது.
ஏந்தலர் பூமான் நபி மீதுள்ள நேசத்தை பாம்பு இப்படிச் சொல்கிறது.
குதிகாலைக் கொஞ்சம்
தீண்டி விட்டேன்
துடித்துப்போன நபித்தோழர் கொஞ்சமும்
குதிகாலை அசைக்காது
கடித்துப் பல்லை
சகித்துக்கொண்டு இருக்க
அவர் கண்ணில்
வடிந்த நீர்த்துளி
நபிகள் பூமுகத்தில் விழ
கண்விழித்த பெருமான்
தோழர் காலை எடுத்து
உமிழ்நீர் தடவிய அக்கணத்தில்
கண்டேன் எங்கள்
காருண்ய நபிமுகம்
காணக் கிடையாத்திருக் காட்சி...
பல்லாண்டு தவம்
பலித்தது
பெருமான் மீதினிலே
பெருவிசுவாசம் கொண்டேன்..
நபித்தோழரே
நம்மை மன்னித்தருள்க..
* * *
மிக விரைவில் எல்லோர் கைகளிலும் முத்திரையிடப்பட்ட மது கிடைக்கும். ஏந்தலர் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் பார்வை எம் எல்லோருக்கும் கிட்டட்டும் ❤️













  • No comments:

    Post a Comment