Saturday, November 19, 2022

பிஸ்தாமி அஹமட்.

 R.M. Nowsaath இன் முத்திரையிடப்பட்ட மதுவுடன்

பிஸ்தாமி அஹமட்.


காலாகாலமாகியும்

காலமாகாமல் அகாலமாய்

இருக்கும் காலங்குறித்தான


கவிதைகள் தான் இவை


காலமும் அதன் இடைவெளியும்

ஆரம்பமும் குறித்தான கவிதை விபரிப்புகள் இவை


ஷம்ஸ் தப்ரீஸியும்

ரூமியும்

தீரனின் வரிகளுக்கிடையில்

மெல்ல மெல்ல

வந்து போவதான உணர்வு

எழுகிறது. 


ஸ்டீபன் ஹோகிங் இன் காலங்குறித்த சுருக்க வரலாறு குறித்த சிக்கலான நூலை விட

காலங்குறித்தான

குறுங்கவிதைகளை

இங்கே

மணக்க மணக்க

பூசி மகிழலாம்

எளிமையாக

சுலபமாக.... 


"காலத்தின் கைகளை பற்றிக்கொண்டு

காலம் போகும் பாதையில்

என் காலம் போகின்றது"


எனும் முதல் 


 கவிதையில் தொடங்கி


"இறை வர்ணத்தில் தோய்ந்து

நான்

இன்புறுவது எக்காலம்"


என்றவாறு 


காலம் குறித்தான ஏக்கத்துடன் 

ஏக்கமெனும் பெருமெதிர்பார்ப்புடன் கூடிய ஏகாந்த கவிதையுடன் முடிகிறது

 நூல்


என்று முடிகிறது நூல்


ரூமியின் கவிதைகளை பூசி மகிழும் ஓர் பரமானந்த சுகம் உங்கள் கவி வரிகளிலும் கமகமவென மணக்கிறது.


முத்திரையிடப்பட்ட மது 


92

 குறுங்கவிதைகளை கொண்ட அழகிய தொகுப்பிது. ஸூ பித்துவ சாயல் நிறைந்த கவிதைகளாகவே இவற்றை நோக்க வேண்டும். முதல் கவிதை காலம் குறித்த கவிதை. ஸூ ரா அல் அஸ்ர் பற்றிய கவிதை எனலாம். அல்லது நானே காலம் என காலம் பற்றி இறைவன் கூறும் வார்த்தைக்கான கவித்துவ வரி எனலாம். காலம் பற்றிய அற்புத வரிகள் அவை. மரண பிடியை மாயப் பறவையாக்கி கவி பாடும் மாயப்பறவை பற்றிய வரிகளும் அபூர்வம். தீரனின் கதைகளும் சிறு கதைகளும் நாவல்களும் மொழியின் கவர்ச்சியை ஈர்ப்பை தன்னகத்தே கொண்டவை. தீரனின் எழுத்தில் மொழியை ரசிப்பதா உள்ளடக்கத்தை ரசிப்பதா என்று தீர்மானிக்க வேண்டியது வாசகன் தான்.


மாமதையகற்ற எரியும் சுடர் குறித்து குழந்தை தரும் பதிலில் குரு நாதரின் அகந்தையும் அறிவுசெருக்கும் இணைந்து அணைந்து விடுகிறது. வாழ்க்கை  குறித்த யதார்த்த ஸூபிக்கவிதையாக அடுத்தடுத்த கவிதைகள் உள்ளன. மொத்தத்தில் வாழ்வு ஆயுள் காலம் மனித வாழ்வு இவை பற்றித்தான் கவிதை சுழல்கிறது. இறைவனின் மகத்தான ஆற்றல், மாபெரும் அண்டப் பிரளயம் இவை தான் இங்கு பேசு பொருள்.


ஏகமும் நீ கவிதையில் தீரன் நௌஷாத் ரூமியின் சாயலை பெறுகிறார்.


மொத்தத்தில் முத்திரையிடப்பட்ட மது பருகி மகிழ அனுமதியுள்ளது. அதில் ஆன்மிக பரவசம் மட்டுமே உண்டு

போதை நீக்கம் செய்யப்பட்ட மதுக்கவிதைகளே அவை.....


மதுரக்கவிதைகள்

Saturday, October 22, 2022

மருதூர் ஜமால்தீன்

 மருதூர் ஜமால்தீன்

முகநூலில்

கவிதை மலர்கள் தொகுதி

களாக மலரும் இலக்கிய கா

லமிது வரவேற்போம்

     ஆனாலும் ஆன்மீகம்

அருகி அல்லது மறக்கடிக்கப்

பட முனையும் இன்னுமொரு

காலமிது,

    நிலைமை எதுவானாலும்

இலக்கியத்தில் ஆன்மீக

மணங்களைத்தெளித்து

வளர்த்தெடுக்கப்பட்டதே

எமது மூதாதையரின் 

கவிதைஞானம்

    இஸ்லாமிய தமிழ் இலக்கி

யத்தில் ஆரம்பகாலந்தொட்டு கடந்த

நூற்றாண்டு இறுதியிலும்

மௌலானா ரூமி(ரஹ்)

அல்லாமா இக்பால்(ரஹ்)

போன்றோர் படைத்தளித்த

இலக்கியங்கள் இதுபோன்ற

பல்வேறு இலக்கிய நூல்கள்

இஸ்லாமிய உலகத்தை தட்டி

யெழுப்பி ஆன்மீகத்தைப்

பொழிந்து மனிதவாழ்வைச்

செம்மைப்படுத்தியதை

மறக்க முடியாது

    அந்தவகையில் இன்று

எத்தனை கவிதை நூல்கள்

மலர்ந்தாலும் மானுடவாழ்

வின் வெற்றி ஆன்மீகப்

பாதையே என்பதை நிறுவும்

ஆர் எம் நௌஷாத்தின்

முத்திரையிடப்பட்ட மதுவை

அருந்தியவர்கள் அதில்

மயங்காமல் இருக்கமுடியாது 

    பல்வேறு நாவல் இலக்கி

யங்களை சமூமயப்படுத்திய

நௌஷாத்திடம் இவ்வளவு

ஆன்மீகமா என வியந்திட

வைக்கிறது இந்நூல்,

     நண்பர் நௌஷாத்தின்

"தீரா வேட்கை" யில் நானும்

நனைந்தேன்


உலகம் வெறுத்து

உணவு ஒறுத்து

உச்சிப்பாறைமீது நான்

தக்பீர் கட்டித்

தனித்து நிற்கவோ,,.


ஹிறாக் குகைக்குள்ளும்

சுறா வயிற்றுக்குள்ளும்

சுருண்டு நான்

ஸுஜுதில் கிடக்கவோ


துர்ஷீனா மலையேறித்

தூக்கமின்றி

நாற்பது இரவு

நடு இருப்பில்

நானிருக்கவோ,,,


அடர்வனம் நடுவே

இடர்தரு பிராணிகளின்

இம்சை பொறுத்து

ருக்கூஹ் செய்தவாறே

ரூஹை விடவோ,,,


என்ன செய்தால்

எனக்கருள்வாய்

இறைவா,,,?


என்ற தீரரின் தீரா வேட்கையிது


எமது உணர்வுகளைத்

தட்டியெழுப்பி எனக்குள்ளும்

ஆன்மீக விதையைத்தூவிய

நண்பர் நௌஷாத் அவர்

களுக்கு வாழ்த்து மலர்களைத்தூவி,,,,

Monday, October 10, 2022

ரியாஸ் குரானா












 

மக்கொனயூராள்

 Farhana Abdulla..

பர்ஹானா அப்துல்லா முக நூலில்


தீரன் ஆர்.எம் நௌஸாத் அவர்களின்.......

முத்திரையிடப்பட்ட மது

பத்திரமாய் இன்றென் கரம் சேர்ந்தது.வாசிப்பில் நேசம் கொள்ள இன்னொரு வரவு.

படைத்தோனிடம் பாவமீட்சியும் பயகம்பர் நாயகத்தின் நேசக் காட்சியும் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிக் காட்டுகின்றன..

அத்துடன் நிதர்சன உலகின் நிஜங்களைப் படம்பிடித்த நிகழ்வுகள் அழகே....


"புள்ளியின் சுழற்சியில்

வட்டம் வடிவமாகும்

காலச் சுழற்சியில்

வயதொன்று முடியும்..

வயதின் சுழற்சியில் வாழ்வு முடியும்"


"நான் எழுதிய வானத்தைச் சுருட்டி

காது குடைகிறேன்

அதில் எழுதிய

என் இளமைப் பேனா உலர்ந்து விட்டது"


அருமையான பனுவலுக்கு அன்பின் நன்றிகள்.


மக்கொனையூராள்




Monday, October 3, 2022

பாலமுனை பாறூக்

 பாவேந்தல் பாலமுனை பாறூக் முகநூலில்



முத்திரை யிட்ட  மதுவுண்டு பூரித்தேன்

அற்புதமாய் வாய்த்த அமுதமது-சத்தியமாய்

பேரின்பத்  தேனைப் பருகத் தரவெனவே

ஊறி வருகின்ற ஊற்று!


முகம்மதுவைப் பாடிச் சுவைக்கும் கவிவரியால் 

அகமினிக்கச் செய்கின்ற  அருமை.-

செகமெங்கும்

ஞான ஒளிபாய்ச்சும்   பானம்

தருகின்ற 

ஏனம்;இதற்குண்டோ ஈடு?


ஆன்மீகச் சிந்தனையில்  ஆழ்மனதைச் செப்பமிட

'நான்'போக்க வேண்டுமெனும்  நற்கருத்தைத்- தேன்கவியாய்க்

கொண்டு மலர்ந்திருக்கும்   தங்கக் கவியேடு

தந்தவனைப்  போற்றுகிறோம் நாம்!

Friday, July 22, 2022

Ashrafa Noordeen

 அஷ்ரபா நூர்டீனின் முகநூல் குறிப்புக்கான  சில பின்னூட்டங்கள்