Monday, October 3, 2022

பாலமுனை பாறூக்

 பாவேந்தல் பாலமுனை பாறூக் முகநூலில்



முத்திரை யிட்ட  மதுவுண்டு பூரித்தேன்

அற்புதமாய் வாய்த்த அமுதமது-சத்தியமாய்

பேரின்பத்  தேனைப் பருகத் தரவெனவே

ஊறி வருகின்ற ஊற்று!


முகம்மதுவைப் பாடிச் சுவைக்கும் கவிவரியால் 

அகமினிக்கச் செய்கின்ற  அருமை.-

செகமெங்கும்

ஞான ஒளிபாய்ச்சும்   பானம்

தருகின்ற 

ஏனம்;இதற்குண்டோ ஈடு?


ஆன்மீகச் சிந்தனையில்  ஆழ்மனதைச் செப்பமிட

'நான்'போக்க வேண்டுமெனும்  நற்கருத்தைத்- தேன்கவியாய்க்

கொண்டு மலர்ந்திருக்கும்   தங்கக் கவியேடு

தந்தவனைப்  போற்றுகிறோம் நாம்!

No comments:

Post a Comment