Friday, May 13, 2022

முத்திரையிடப்பட்ட மது

 

 

முத்திரையிடப்பட்ட மது

 

ஆர்.எம். நௌஸாத்

0

 

வெளியீடு

 

அபாபீல்கள் கவிதா வட்டம்

 

0

சமர்ப்பணம்

 

பன்னூலாசிரியர் ஹாதிபுல் ஹ_தா

 

மர்ஹ{ம் எம்.எம்.எம். நூறுல்ஹக்

 

அவர்களுக்கு

 

 

அகப்படம்

 

1980களிலிருந்து ää கவிதைகள் என்ற பேரில்ää ஏராளமாக எழுதிக்

 

கொண்டிருந்தேன்.அவைகளில் சிலவற்றை 1983 களில்ää நான் வெளியிட்ட தூது

 

கவியேட்டின் 16 இதழ்களிலும்ää மேலும் சிலவற்றைää “அபாயா

 

என் கறுப்பு வானம்என்ற மின் நூலிலும்ää நான் எழுதிய

 

குறும்பாக்களைää “குறு நெல்என்ற தொகுப்பிலும்ää சுனாமி

 

காவியத்தை ஆழித்தாயே அழித்தாயேஎன்ற கையடக்க

 

நூலிலும்ää என் கவியரங்க கவிதைகளை தீராவெளிஎன்ற

 

வலைத்தளத்திலும்ää காணலாம் என்ற விபரங்களை ஒரு தகவலுக்காக

 

பதிவு செய்து கொண்டு.....ää

 

ஏறக்குறைய 40 வருடங்களாக எழுத்துத் துறையில் நான்

 

இருந்தும் ஓர் அற்ப புகழ் தவிர எதனைக் கண்டோம் என்ற

 

ஒரு மாயக்குரல் என் மனதுக்குள் சமீபகாலமாக மெதுமெதுவாக

 

கேட்கத் தொடங்கிற்று.

 

அது விஸ்வரூபம் எடுத்த போதுää இலக்கியச் செயற்பாடுகள்

 

மீதான என் ஈடுபாடு வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. எழுது

 

வதைக்கூட நிறுத்திவிடலாமோ என்று யோசிக்க தொடங்கினேன்...

 

ஒரு புள்ளிக்குள் ஓர் உலகத்தை பார்ப்பதுவும் ஓர் உலகத்தை

 

ஒரு புள்ளியாக காண்பதுவுமானää வேள்விக்குள் என்னை

 

நானே ஈடுபடுத்திய பின்னரான காலங்களில்ää சில கவிதைகள்

 

எழுத நேர்ந்த போதுää என் வெளிப்பாடுகள் தாமாகவே வேறு

 

வடிவம் கொள்ளத் தொடங்கின என்றுணர்ந்தேன்.

 

6 முத்திரையிடப்பட்ட மது - ஆர்.எம். நௌஸாத்

 

இந்நிலையில்ää சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவும்ää எழுதும்

 

உந்துதல் தூண்டப்பட்ட போதும்ää முகநூலில் மட்டும் சில

 

கவிதைகளை எழுதி வந்தேன். அவற்றுக்கு முகநூல் நண்பர்கள்

 

இட்ட பின்னூட்டங்கள் எனக்கொரு பெரிய உற்சாகத்தை தந்தன.

 

அவற்றுள்ää 2020 களின் பின்னர் எழுதியää பலவற்றை இந்நூலில்

 

தொகுத்துள்ளேன்..

 

உயிருள்ளவரை குர்ஆனுக்குக் கட்டுப்பட்டவன் நான்.. தேர்ந்

 

தெடுக்கப்பட்ட உத்தமர் முஹம்மத் ஸல்லல்லாஹ_ அலைஹி

 

வஸல்லம் அவர்களின் பாதையின் பணிவான தூசி நான்..

 

இதற்கு வேறாய் என் கவியை யாரேனும் விளங்கினால்

 

அவனை விட்டும் விலகுகிறேன்.அவன் சொல்லின் மீதும்

 

வெறுப்பானேன்”.

 

என்றää தத்துவஞானியும் இறைநேசருமான மௌலானா

 

ரூமியின் சொல்லையே என் அகவாக்கியமாகக் கொண்டேன்.

 

இந்த திருப்புப் புள்ளியிலிருந்துää இவை பற்றிய உரையாடல்களை

 

தொடங்குவோமாக..

 

இந்நூலை அழகுற அமைத்த excellent print நண்பர் நவாஸ்

 

சௌபி அவர்களுக்கும்ää ஒத்துழைத்த நண்பர்களுக்கும் மனமுவந்த

 

நன்றிகள்.

 

 

ஆர்.எம். நௌஷாத்.

 

1852 பழைய சந்தை வீதி

 

சாய்ந்தமருது.1.

 

0774781250.

 

 

 

 

காலாதிகாலம்

 

 

காலத்தின் கைகளை

 

பற்றிக் கொண்டு

 

காலம் போகும் பாதையில்

 

என் காலம் போகின்றது

 

காலத்தின் கால்கள்

 

கன காலமாய்

 

ஓரிடத்தில்

 

நிற்பதுமில்லை

 

காலம் ஒரு காலத்திலும்

 

காலமாகுவதுமில்லை

 

ஆனால்ää

 

காலம் செல்லச்செல்ல

 

காலம்

 

இறந்த காலமாகிறது..

 

காலம் செல்லும் முன்

 

நான்ää

 

காலம் சென்று விடுவேனோ...

 

காலம்காலமாக

 

காலம்

 

காலமாகவே இருக்கிறது..

 

காலத்தின் முன்

 

ஒரு காலம்

 

இருந்ததா என்றால்ää

 

நானே காலமாக இருக்கிறேன்

 

என்று

 

காலம் பதிலளித்தது.

 

0

 

 

மாயப் பறவை

 

 

காலவானத்தில்

 

ஆலவட்டம் போடுகிறது

 

இந்த மாயப்பறவை

 

அதன்

 

ஆயுள்க் கண்கள்

 

பூமியில்தான்.

 

விர்ரென்று இறங்கும்

 

வேகம்தான் என்ன..

 

பாசச் சிறகுகளுக்குள்

 

பதுங்கிய போதிலும்

 

இரும்புக கோட்டைக்குள்

 

இருந்த போதிலும்

 

குறித்த நேரத்தில்

 

குறி தப்பாதுää

 

எந்தக் குஞ்சைக்

 

கொத்திப் பறக்குமோ

 

யாரறிவார்..?

 

0

 

 

ஞானஒளி

 

 

எரியும் மெழுகுதிரியை

 

ஏந்தி வந்ததோர் குழந்தை

 

எதிரே வந்த ஞானி ஹசன்

 

எகத்தாளமாய் கேடடார்

 

ஆய்...குழந்தாய்

 

எங்கிருந்து வந்தது இந்த ஒளி.?

 

குப்பென நெருப்பை

 

ஊதி அணைத்த

 

குழந்தை சொன்னது

 

ஒளி போன இடம் எங்கே என்று

 

சொல்லுங்கள் பெரியவரே...

 

ஒளி எங்கிருந்து வந்தது

 

என்று நான் சொல்கிறேன்

 

குழந்தையின் பதிலில்

 

மமதை அழிந்த மகான்

 

குழந்தாய் நீயே என் குரு

 

என மொழிந்தார்..

 

0

 

நான் என்ற ஒளிக்கிரகம்

 

 

விரிந்த வெளியில்

 

விசை கொடுக்கப்பட்டு

 

விரையும்

 

விண் கிரகம் நான்.

 

வட்டப்பாதைகள் உள்ள

 

வானத்தின் ஊடேää

 

கோடா கோடி

 

அண்டங்கள் கடந்துää

 

என்னைக் கவர்ந்து

 

இழுக்கின்றதோர்

 

ஒளிமுதல்.

 

விரைவில் அடைவேனோ

 

இடையில்ää

 

வெடித்துச் சிதறுவேனோ..

 

நூரை நெருங்கும் முன்னர்

 

நூர்ந்து விடுவேனா..

 

காலக் கருந்துளையில்

 

சிக்கிக்

 

காணாமல் போவேனோ

 

ஒளிமுதலில் கரைந்து

 

ஒன்றுமில்லா நிலையில்

 

ஒன்றித்து ஓய்ந்து விடுவேனோ..?

 

விரைந்து கொண்டிருக்கிறேன்..

 

0

 

 

காலமானி

 

 

செக்கன் கம்பியில்

 

செல்லும் குழந்தை

 

நிமிடக் கம்பியில்

 

நடக்கும் வாலிபம்

 

மணிக்கம்பியில்

 

ஊரும் வயோதிபம்

 

சுழலும் மனிதரைச்

 

சுற்றி வரச் செய்யும்

 

பெற்றிக் கலத்தின்

 

சக்தி குறைந்து

 

விசை கொடுத்து

 

முறுக்கேறிய

 

தசை பிரிந்து

 

ஆடுகின்ற பெண்டுலம்

 

ஒரு வினாடியில்

 

ஆட்டத்தை நிறுத்த..

 

ஓட்டத்தை நிறுத்தும்

 

இந்தக்

 

காலமானி.

 

நில்லாது ஓடக்

 

காலமாநீ.?

 

0

 

 

எழுதித் தீராக் கவிதை

 

 

எப்படி எழுத

 

இந்தக் கவிதையை..

 

தலையில் எழுதியதைத்

 

தாளில் எழுதுவதா..

 

அன்றிச்

 

சுழியில் எழுதியதை

 

மொழியில் எழுதுவதோ..?

 

ஆழியில் எழுதிய

 

அரிச்சுவடியை

 

ஆர்தான் சொல்ல முடியும்..

 

ஆதியில் எழுதிய

 

அகரத்தை

 

ஆருக்குச் சொல்ல இயலும்..

 

விரல் எழுதிய வரியை

 

விதி ஒப்புக்கொள்ளுமோ...

 

எழுதிச்செல்லும்

 

விதியின் விரலில்

 

நழுவி விழுமோ

 

நமக்கான எழுத்து...

 

எப்படி எழுத

 

இந்தக் கவிதையை..?

 

0

 

 

ஒளிப் புறா

 

அந்த

 

ஒளிப்புறா போன

 

வழி எதுவோ..

 

இதுவரை

 

இருட் கூண்டினுள்

 

ஒளித்திருந்த

 

ஒளிப்புறா

 

வெளிப்பறந்த

 

ஓட்டை எது...

 

வழிப்போக்கன் வந்து

 

வலிந்து இழுத்த

 

வாசல் எது..

 

விழி திறந்தொரு

 

வழி பிறந்ததோ..

 

விழித்திரை

 

கிழித்தந்த

 

ஒளிப்புறா பறந்ததோ

 

இருவிழியின்

 

கருவிழியும் மேலே

 

சொருகியொரு

 

வழி பிளந்ததோ..

 

இனி

 

அது திரும்புமோ..?

 

0

 

 

மாயச்சுழல்

 

அணுவுக்குள் சுழல்வது

 

அண்டத்திலும் சுழலும்

 

மனுவுக்குள் சுழல்வது

 

மாயத்துள் சுழலும்

 

பூமியின் சுழற்சியில்

 

நாளொன்று நடக்கும்

 

சு10ரியன் சுழற்சியில்

 

ஆண்டொன்று கடக்கும்

 

சந்திரனின் சுழற்சியில்

 

பிறை ஒன்று சிரிக்கும்

 

சக்கரத்தின் சுழற்சியில்

 

சாகசங்கள் நிகழும்

 

_பியின் சுழற்சியில்

 

சு10ட்சுமம் புரியும்

 

புள்ளியின் சுழற்சியில்

 

வட்டம் வடிவமாகும்

 

காலச் சுழற்சியில்

 

வயதொன்று முடியும்...

 

வயதின் சுழற்சியில்

 

வாழ்வு முடியும்....

 

0

 

 

கைவிளக்கு

 

 

ஏந்தி வந்தேன்

 

என் கைவிளக்கை

 

உன்னிடம்..

 

எரியாத திரியில்

 

எண்ணெய் விட

 

நூர்ந்து போன

 

நூரைத் தூண்டிவிட..

 

இருளான உள் வீட்டில்

 

அருள் ஒளி பெற

 

ஏந்திய விளக்கு

 

இதுவரை எரியவில்லை

 

இது ஏனென்று விளக்கு..

 

எனக்கு மட்டும்

 

உன் சந்நிதியில்

 

ஏன் விலக்கு.?

 

ஏற்றிவிடு.

 

என் விளக்கை

 

இன்றேல்

 

எறிந்து விடு

 

என் வழக்கை..

 

0

 

 

ஏகமும் நீ

 

 

மழைத்துளி நீ...

 

அது தரும் மண்வாசம் நீ..

 

பனித்துளி நீ..

 

அது தரும் பரவசம் நீ...

 

வனக்கிளி நீ

 

அதன் பஞ்சவர்ணம் நீ

 

சிறுவுளி நீ..

 

அது செதுக்கும்சிற்பமும் நீ

 

நறும்புளி நீ..

 

நாவிலூறும் சுவையும் நீ

 

மனக்கிளி நீ

 

மிழற்றும் மொழியும் நீ

 

தமிழ் மொழி நீ

 

அது தரும் இனிமை நீ

 

நூர் ஒளி நீ

 

நூர்ந்த இருளும் நீ

 

எனக்களி நீ

 

உன தருள் முழுமையும்..

 

0

 

உமர்கையாமின் உலகத்திலிருந்து..

 

 

ஆடிக் கொண்டிருங்கள்

 

மிக மெதுவாக

 

அடிமையே

 

கோப்பையை நிரப்பு..

 

உத்வேகமுறும் நரம்புகளை ஊடறுக்கும்

 

இனிய சங்கீதம் ஒலிக்க விடு.

 

படுதாக்களைச் சுருட்டி விடு

 

என்னவளை வரச் சொல்

 

அவளது

 

செம்பஞ்சுப் பாதங்களில்

 

மனது வெறி கொள்ளட்டும்..

 

அம்ச தூளிகா ஆடட்டும்

 

துல்துல்லும் புறாக்கும்

 

வானேகிப் பறக்கட்டும்

 

 

மல்லிகை மணக்கும்

 

மந்தகாச இரவில்

 

நாணரேகை ஓடும் கன்னங்களை

 

இனியும் பட்டுப் பர்தா

 

மறைக்க வேண்டாம்

 

நீக்கிவிடு..

 

என்

 

காதல் முத்தத்தில்

 

மூழ்கிவிடு...

 

என் கவிதைகளைக்

 

காதலிப்பது உண்மையாயின்

 

நீ

 

மட்டும் வந்துவிடு அன்பே!

 

0

 

 

சொக்கு(ம்) குழி

 

 

சின்னக்கிளி இவள் கன்னத்தில்

 

அன்னக்கிளி வந்து கொத்திய

 

கன்னக்குழி இதுவோ..

 

நீல

 

வண்ணக்கிளி இவளின்

 

கள்ளக்கிளி வந்து கன்னம்

 

வைத்ததிந்த எழிலோ..

 

பற்கள்

 

உருண்டு ஓடி வருகின்ற

 

பல்லாங்குழியோ

 

இல்லை

 

சொற்கள் சிக்கி விழுகின்ற

 

சொக்குக்குழியோ..

 

சின்னக்குழி

 

இதுவென் எண்ணத்திலே வந்து

 

சொன்னமொழி

 

இவளின் கன்னி மொழியோ

 

கன்னத்து

 

நிலத்திலிவள்

 

புதைத்து வைத்த

 

கண்ணி வெடியோ..

 

இதில்

 

சிக்கி வெடித்துப் பறந்தவர்

 

எத்தனை கோடியோ..

 

கன்னத் தரையில் வந்து விழுந்த

 

மின்னல்த்துளி இதுவோ..

 

நானும்ää

 

முகநூலில் பதித்திட்டஎன்ää

 

எண்ணத்துளி அழகோ.?

 

0

 

 

இச்சா

 

 

மஞ்சள் சோறு பறக்கத் தாளித்து

 

மணமணக்குது

 

கஜூவும் பிளம்ஸ_ம் கலந்து

 

தூவி கலகலக்குது

 

கலர்கலராய் நூடுல்ஸ் இழைகள்

 

கண்ணைக் கட்டுது

 

பச்சை பீன்ஸ_ பதமாய் வெந்து

 

பரவிக் கிடக்குது

 

மாட்டிறைச்சி ரோஸ்ட்டு பண்ணிக்

 

கமகமக்குது

 

கோழிச்சந்தும் மேலே கிடந்து

 

கண்ணைக் கவருது

 

ஆட்டுக் குருமா அடியில் கிடந்து

 

எட்டிப்பார்க்குது

 

முட்டை ஒன்று வெள்ளை நிறத்தில்

 

பளபளக்குது

 

 

சலாது இலையும் சைட்டாக இருந்து

 

ஸலாம் சொல்லுது

 

பலதும் கலந்த களியாக் கறியும்

 

பசியைத் தூண்டுது

 

மாம்பழ ஜேமும் மம்பல கிடந்து

 

மனசில இனிக்குது

 

மாசிச் சம்பலும் கிழங்கு மசியலும்

 

மையலைக் கூட்டுது

 

கறுத்தப் புளிஆணமும்

 

ஒரு கோப்பையில் இருக்குது

 

தயிரு கூடக் கப்பில் போட்டுத்

 

தளதள என்குது

 

இத்தனை செய்த மனைவி வந்து

 

சாப்பிடும் போது

 

இச்செனக் கொடுத்த முத்தம்தான்

 

இன்னும் ருசிக்குது

 

0

 

முக்காலமுணர்

 

 

எனக்கு முன்னர்

 

ஒரு காலம் சென்றது

 

அதில் நான் இல்லை.

 

எனக்குப் பின்னர்

 

ஒரு காலம் வரும்

 

அதிலும் நான் இல்லை.

 

என்னுடன் இப்போது

 

ஒரு காலம் இருக்கிறது

 

அதில் நான் இருக்கிறேன்...

 

எனக்கு முன்னர்

 

ஒரு காலம் சென்றது

 

அதில் நான் இருந்தேன்.

 

எனக்குப் பின்னர்

 

ஒரு காலம் வரும்

 

அதிலும் நான் இருப்பேன்.

 

என்னுடன் இப்போது

 

ஒரு காலம் இருக்கிறது

 

அதில் நான் இல்லை...

 

0

 

 

காஸாவிதி

 

மூஸாவுக்கு

 

ஆஷாவைக் கொடுத்து

 

யூதரைக் காத்தாய்

 

இஸ்ரேலருக்கு

 

ஈஸாவைக் கொடுத்து

 

இரக்கம் காட்டினாய்

 

அமெரிக்காவுக்கு

 

நாஸாவைக் கொடுத்து

 

அதிகாரம் அளித்தாய்

 

இலங்கைக்கு

 

பூசாவைக் கொடுத்து

 

வதைகள் செய்தாய்

 

பலஸ்தீனருக்கோ

 

காஸாவைக் கொடுத்து

 

கண்ணீரையும் கொடுத்தாய்..

 

0

 

 

உனக்குப் பிடிக்காத பாட்டு...

 

 

ஊறிடும் கருவெடுத்து

 

ஊடுருவிச் சொல்லெடுத்து

 

உள்ளத்துள் உலவுகிற

 

உள்ளொளியாம் நப்சுதனைப் பாடினால்

 

உனக்குப்

 

பிடிக்காதென்கிறாய்..

 

சீறிடும் ஆத்மாவைச்

 

சிறைப்படுத்தி அடக்கிச்

 

சீர்படுத்தி மனதுடன்

 

போரிடும் பாட்டைப்

 

பாடக்கூடாதென்கிறாய்

 

மீறிடும் ஆசைகளை

 

மடக்கிப்

 

பீறிடும் மனதை வசப்படுத்தி

 

ஓரிடம் ஒடுக்கிடும் பாட்டை

 

ஆரிடம் நான் சொல்லிப் பாடுவேன்..

 

மாறிடும் காலம் எல்லாம்

 

மனிதரைப் பாடி..அவர்

 

எல்லை

 

மீறிடும் போது

 

யாரிடம் சொல்லி அழுவேன்..

 

இறைவா உன்

 

பேரருளைப் பாடிக் களிக்கிறேன்.

 

0

 

 

வண்ணான் வரவில்லை இன்னும்...

 

 

இந்த

 

ஆடை அழுக்காகி விட்டது

 

எடுத்தணிந்த நேரம்

 

எத்துணை அழகு

 

துகில் வெள்ளை..

 

தூக்கி முகர்ந்தவர் பலர்

 

ஆயின்ää

 

ஒரே சட்டையை

 

எத்தனை காலம் அணிவது..

 

அழுக்குச் சட்டையை

 

அகற்றும் காலம் இது..

 

வெளுக்கப் போடுதல் வேண்டும்..

 

விரைவில்ää

 

வண்ணான் வரக்கூடும்

 

கடினமாய்க் கழற்றுவதும்

 

இலேசாக உருவுதலும்

 

உண்டு

 

பிரித்துää

 

மாராப்புக்குள் வைத்தால்

 

மறுபடி வரலாமோ...?

 

0

 

 

அறுதி

 

 

வாசலுக்கு

 

வந்துவிட்டாய்

 

வா..

 

ஓரக்கண்ணால் என்

 

ஒட்டகையைப் பார்க்கிறாய்...பார்

 

வாழ்க்கைப் பாலையில்

 

வெகுதூரம் வந்து

 

வாயில் நுரை தள்ளி

 

வதங்கிக் கிடக்கிறது அது..

 

வாங்க

 

வந்திருக்கிறாய்...

 

தாங்கமுடியாச் சுமைகளைத்

 

தாங்கி நடந்த பின்

 

தீவனமும் தின்னாது

 

தளர்ந்து படுத்திருக்கிறது

 

பாவம்..

 

இனித்

 

திரும்ப முடியா

 

இடத்துக்கு....

 

ஓட்டிச்செல் என் எஜமானே...

 

0

 

கச்சக்கசம்

 

 

பச்சோந்திக்குப்

 

பொன்னாடை..

 

நச்சரவத்துக்கு

 

நகைக்கிரீடம்

 

பச்சைத்துரோகத்துக்குப்

 

பல்லக்குப் பயணம்

 

கொடுப்புலிக்கு

 

கொச்சி மஞ்சள்

 

பச்சைக்கிளியில்

 

பத்து நிறம்

 

பிச்சைக்காரனுக்குப்

 

பட்டுப் பீதாம்பரம்..

 

இச்சைக் கொடியில்

 

இச்சாதாரிப் பாம்பு

 

குச்சு வீட்டில்

 

கோபுரத்தின் நிழல்

 

உச்சஸ்தாயியில்

 

ஊமையன் பாட்டு

 

தச்சன் சபையில்

 

தறுதலைக்கு வேலை

 

பச்சைப் பொய் கூறி

 

பத்தினி வந்து

 

வெச்சுச் செய்தாள்

 

வஞ்சகி..அவள்

 

அச்சு அசல் இதுவாமோ

 

0

 

 

தங்கநகைமாளிகை நீ

 

 

தோளுக்கு மேலே

 

தொட்டுப் பார்க்கும்

 

தொங்கட்டான் நீ

 

உன் காதுகளில்

 

தூக்குப்போட்டுத்

 

தொங்கட்டா நான்..?

 

மார்புக்குள்

 

மறைந்திருக்கும்

 

தங்கச் சங்கிலி நீ..

 

அதன் மடிப்புக்குள்

 

மூச்சுத்தட்டும்

 

பைங்கிளி நான்

 

தாக்கத்தி மூக்கில்

 

மின்னுகிற

 

மூக்குத்தி நீ..

 

அதன்

 

தாக்கத்தில்

 

பறந்து வரும்

 

மனங்கொத்தி நான்..

 

கையைச் சுற்றிக் கட்டிய

 

கைப்பட்டி நீ

 

உன்னைக் கைப்பற்றிக்

 

கவிதை எழுதும்

 

மைப்புட்டி நான்

 

 

22 கரட்டுத் தங்கம் நீ

 

28வயது முரட்டுச் சிங்கம் நான்..

 

சங்குக்கழுத்தில்

 

தொங்கும் தாலி நீ

 

உன்அங்கம் முழுதும்

 

எழுத்தில் எழுதும்

 

வாலி நான்..

 

உனக்குச்

 

செய்கூலி சேதாரம் இல்லை

 

நீ இன்றேல்

 

எனக்குக்

 

கைக்கூலி ஆதாரம் இல்லை..

 

அஞ்சு விரலிலும் அணியும் மோதிரம் நீ..

 

அந்த விரலைக் காதினுள் விட்டு

 

அஞ்சு ஒகுத்தும்

 

உன் பெயர் பறியும்

 

மோதினார் நான்.

 

காப்புப் போட்ட

 

கவிதை நீ ..

 

உனக்கு யாப்புச் செய்த

 

கவிஞன் நான்.

 

உன் காதினில்

 

மின்னி மின்னித் தூக்கு

 

நீ இல்லையேல்ää

 

அதை எண்ணி எண்ணி

 

என் கழுத்தினில்

 

தூக்கு.

 

0

 

விட்டு விடுதலையாகி

 

 

கண்ணைக் கட்டிக்

 

காட்டில் விட்டுப்

 

பார்த்துச் சிரிக்கின்றாய்

 

முட்டும் மிருகம்

 

வெட்டும் மின்னல்

 

கொட்டும் குளவிக்

 

கூட்டில் விட்டுக்

 

கூத்துக் காட்டுகிறாய்

 

குட்டிக் குட்டிக்

 

குனியச் செய்து

 

தட்டிப் பணித்துத்

 

தரையில் புதைக்கும்

 

தருதலை மத்தியில்

 

தனியே விட்டாய்.

 

இருட்டுக் குகையில்

 

இட்டுச் சென்று

 

தட்டுத் தடுமாறச்

 

செய்து ரசிக்கின்றாய்

 

இத்தனை சோதனை

 

எத்துணை வேதனை

 

தந்தெனைச் சோதிக்கும்

 

நிந்தனை ஏனோ..

 

இவற்றை

 

விட்டு விடுதலையாகிச்

 

சிட்டாய்ப் பறந்திடச்

 

சிறகுகள் தாராயோ.?

 

0

 

பிரிவு

 

 

ஏய்,

 

சிட்டுக்குருவி

 

என்னை விட்டுப் போவாயோ

 

உன் பட்டுச் சிறகை

 

விரித்துப் பறந்திடுவாயோ

 

என் வீட்டுச் சுவரில்

 

உன் கூட்டைக் கட்ட

 

விட்டுத் தந்தேனே..

 

நீ முட்டை இட்டு

 

ரெட்டைக் குஞ்சு பெறப்

 

பட்ட பாட்டைப்

 

பார்த்திருந்தேனே..

 

வீட்டை உனக்கு

 

விட்டுக்கொடுத்த

 

என்னைக் கை

 

விட்டுப் பறப்பாயோ

 

இந்த நன்றி கெட்ட

 

நடத்தையை நீ

 

எங்கள் கேடு

 

கெட்ட மானுடர்

 

தம்மிலிருந்தே

 

கற்றுக் கொண்டாயோ....

 

ஏய்ää

 

சிட்டுக்குருவி

 

என்னை விட்டுப் போவாயோ?

 

0

 

சாக்கணம்

 

 

இக்கணமே வருக

 

இஸ்ராயீலேää

 

கொத்தித் தின்கிறது

 

கொடும் கழுகு ஒன்று

 

அண்டம் முழுக்க

 

கத்திக் கலைக்கிறது

 

அண்டங்காகம்

 

விரட்டிக் கடிக்கிறது

 

விசர் நாய் ஒன்று

 

புரட்டிப் போட்டுப்

 

பிடுங்கி எடுக்கிறது புலி

 

சீறிப் படமெடுத்து

 

ஊறிய விஷத்தை

 

உயிரில் துப்புகிறது நச்சரவம்

 

இன்னும்ää

 

எத்தனை காலம்

 

இத்தனை கொடுமை..

 

இக்கணமே வருக

 

இஸ்ராயீலே....

 

0

 

 

சாஸ்வதம்

 

 

ஓய்வது இலையென

 

ஒரு மரம் பூக்கிறது

 

தாயவள் தலைமேல்

 

தனிமலர் அமர்கிறது

 

மாயவன் மலரடி

 

ஓரிதழ் சேர்கிறது

 

மானுடர் மார்பினில்

 

மறுமலர் மணக்கிறது

 

பாடுற வண்டுக்குத்

 

தேனிதழ் தெரிகிறது

 

ஓயவேது வாழ்வினில்

 

மறுவிதழ் மலர்கிறது

 

ஆய்கிற மலர்தனில்

 

அகமியம் தெரிகிறது

 

சாவது இலையென

 

சகலமும் நினைக்கிறது

 

காய்கிற சருகும்

 

கனவிலே வாழ்கிறது

 

சாய்கிற பொழுதுகள்

 

சத்தியம் செய்கிறது

 

யாவரும் ஒருபொழுது

 

ஓய்வது நிஜமென ..

 

0

 

 

 

பயணம்

 

பெருநதிப் பரப்பில்

 

சிறு இலை மீதில்

 

ஒரு தனி எறும்பு

 

காலத் துடுப்புத் துழாவி

 

நதி கடக்க நகரும்

 

நெடுவொரு நாளில்

 

கரை சேரும் போதில்

 

சிறு எறும்பின்

 

விதிஎழுத

 

கரையிலோர் உயிருண்ணி

 

ஓரு இறை ஞானம்

 

தருமறைபொருள் விளங்க

 

இலைச் சிறு எறும்பு

 

இறையடி சேரும்.

 

0

 

நான் எனும் நாவல்

 

 

நான்என்ற நாவலை

 

முழுதாக வாசித்து

 

முன்னுரை தந்தான்

 

முதற்படைப்பாளி

 

என்னுடன் வசித்தவர்கள்

 

என்னை வாசித்து முடித்தனர்

 

விமர்சித்தனர்...

 

பக்கம் பக்கமாகப் புரட்டிப் படித்து...

 

அடிக்கோடிட்டதால்

 

நடுநடுவே பக்கம் கிழிந்து

 

நொந்து நூலாய் ஆனேன்..

 

திடீரென யாரோ

 

ஒரு முடிவுரை எழுதிவிட....

 

முன்பின் அட்டைகள் கழன்று

 

பக்கங்களும் ஒவ்வொன்றாய் அழிந்து....

 

என் முகப்-புப் படம்

 

இனி ஏது .?

 

பூமியின் இடுக்கில்

 

ஒரு அடுக்கில்

 

மெய் கழிந்து

 

மை அழிந்து கிடக்கிறேன்...

 

என்னை வாசிக்க வருவதாயின்

 

சுவாசிக்க தேவையில்லை

 

வருவீரோ..?

 

0

 

 

பாதித்துறவி

 

 

ஓதித் தந்த

 

ஒன்றும் ஏறவில்லை

 

போதித்தவையும்

 

போனது வீணே...

 

சாதிக்க எண்ணச்

 

சறுக்கியது ஏணி

 

பாதிக் கிணறு

 

தாண்டவுமில்லை..

 

நீதிக் கதைகளில்

 

நெஞ்சு நிலைக்கவில்லை

 

ஆதிப்பாவம் மட்டும்

 

அணுவளவும் மாறவில்லை

 

ஆதிக்க மனதை

 

அடக்க வழியில்லை

 

மீதித் துயரெல்லாம்

 

முடிந்து விடவில்லை

 

பாதித் துறவறம்

 

பக்குவம் பெறவில்லை...

 

பாதிப்பில் உள்ளம்

 

பரமனைக் காணவில்லை

 

0

 

 

துவிதக் கண்ணாடி

 

 

காலையில்

 

கண்ணாடிக்குள்

 

காணவில்லை என்னை

 

உற்றுப் பார்க்கிறேன்

 

உருவம் தெரியவில்லை

 

சற்றுப் பின் சென்று

 

சாய்ந்து பார்க்கிறேன்

 

சத்தியமாய்க் காணவில்லை

 

கண்ணாடி இருக்கிறது

 

கண்ணும் இருக்கிறது

 

காட்சி எங்கே

 

காணவில்லை

 

கண்ணும் கண்ணாடியும்

 

ஒன்றெனக் காணின்ää

 

காட்சி மறைந்ததோ

 

கண் மறைத்ததோ...

 

கண் வில்லையும்

 

காணும் வில்லையும்

 

வேறெனக் கொண்டால்

 

கண்ணும் காட்சியும் உண்டு..

 

0

 

பூனைக்குட்டி மேகம்

 

 

உள்ளங்கையில் வளர்ந்த

 

என் பஞ்சுப் பொதியே...

 

என்னை அபூ ஹ_ரைராவாக்கிய

 

ஆச்சரிய நதியே

 

அஞ்சு வருஷம் எந்தன்

 

அருகில் வாழ்ந்த பிஞ்சு விதியே

 

அறைக்குள் நடமாடித் திரிந்த

 

என் குட்டி மேகமே

 

வீட்டுக்கு நான் வரும்வரைக்கும்

 

கேட்டுக்கு அருகில் காத்திருக்கும்

 

கறுப்புக் கம்பளியே...

 

என்ன விதியோ..

 

விரைவில் உயிரை விடடாய் என்

 

விசித்திர மாணிக்கமே

 

குரவர் கூடி வந்துனக்கு

 

கோரோணா எனக்கூறிக்

 

கொண்டு போய்க்

 

கொளுத்திடும் முன்னேää

 

என் தோட்டத்தில் உனைஅடக்கிää

 

அதிலொரு ரோஜா செடி நட்டு

 

ஆறுதல் பெறுவேன்

 

எனதன்பின் ஆத்மாவே....

 

0

 

 

வக்கிர வதை

 

 

வெட்டிய மின்னலை

 

விழிகளில் ஏந்துகிறேன்

 

கொட்டிய நெருப்பினை

 

கொதிப்புடன் விழுங்குகிறேன்

 

திட்டிய மொழியெல்லாம்

 

திகைப்புடன் சகிக்கின்றேன்

 

முட்டிய மோதலை

 

முழுதாய் தாங்குகிறேன்

 

குட்டிய போதெல்லாம்

 

குனிந்தே இருக்கிறேன்

 

எட்டியவள் உதைத்த போது

 

எல்லாம் வாங்குகிறேன்

 

வெட்டிய கபுருக்குள்

 

வைக்கும் நேரமிதோ

 

யானறியேன்..

 

0

 

 

கடைசிவார்த்தை

 

 

கள்ளப் பார்வையால்ää

 

காற்றைக் கொளுத்தி எறிந்தாய்..

 

அக்-கணத்தில்

 

காணாமற் போனேன் நான்..

 

நான் அணிந்திருந்த

 

கனவைக் களவெடுத்து

 

அதில்ää

 

புன்னகையால் ஒருää

 

பூவேலைப்பாடு நெய்தாய்

 

இன்னும்ää

 

பூக்களால் ஆன ஒரு

 

பூகம்பம் செய்தாய்

 

அதைப் போர்த்தி

 

உறங்கினேன்

 

காணாதென்றாää

 

கடித உறைக்குள்

 

கண்ணிவெடி வைத்தும்

 

அனுப்பினாய்..

 

என் கல்பு சிதறிக்

 

கவிதைத்தூள் ஆனது

 

கடைசிவார்த்தை

 

ஒன்று சொன்னாய் பார்ää

 

என் வானம்

 

உன் காலடியில்

 

நொறுங்கி விழுந்தது..

 

0

 

 

 தீராசந்தேகம்

 

 

கொத்துக் கொத்தாய்ப்

 

பூத்தீரா மலர்களே..

 

மனதைப்

 

பித்துப்பிடிக்க வைத்தீரா..

 

அதிவிடியலில்ää

 

தீராää தீரா என

 

என்னை அழைத்தீரா..

 

நாடி வந்தொரு பூச்சி

 

தீராக் காதலைச்

 

சொன்ன போதினில்

 

நாணத்தால் சிவந்தீரா..

 

வர்ணங்களை

 

வானில் உதறிப் பறந்தீரா..

 

ரசித்துத் தீரா

 

உம் அழகை நோக்கிப்

 

பறந்து வந்த ஒரு

 

பருந்தைப் பார்த்துச் சிரித்தீரா..

 

பாதை மறந்தீரா

 

பூச்சியின் மென்மை

 

பருந்திடம் எதிர்பார்த்தீரா..

 

சொல்லித் தீரா என்

 

சோகத்தைக் கேட்டு

 

விழிகள் சொட்டுப்

 

பனித்தீரா..?

 

0

 

 

நக்கிய நாயின் கிக்கிலி

 

 

அடுத்துக் கெடுத்து

 

எடுத்துக் கவிழ்த்து

 

வாசலில் படுத்துக் கிடந்துவார

 

நக்கிய நாய் சிரிக்குது

 

எலும்பு தேடி

 

ஏழு வீடு ஏகி

 

எச்சில் வழிய

 

எடுத்து வந்து

 

நக்கிய நாய் நகைக்குது

 

நடித்து வால் பிடித்து

 

நம்பிய பின்

 

கடித்துக் குதறிய

 

கள்ள நாய் கனைக்குது

 

கோள் சொல்லிக்

 

குடும்பத்தைக் காட்டிக் கொடுத்துக்

 

கள்ளருக்கும் கூட்டிக் கொடுத்த கெப்பரில்

 

குள்ள நாய் குரைக்குது

 

கம்பம் காணக் கப்புக் கிளப்பிச்

 

சிறுநீரடித்துச் சிறுமை செய்த ஞமலி

 

தன் தப்புப் புத்தியைக்

 

காட்டித் தனகுது

 

நாயேää நீயே

 

புதிய எஜமானை

 

நம்பி...னாயே..

 

வாழ்க நீயே..

 

0

 

 

மாவிதி

 

 

அரித்தெடுத்துக் குழைத்து

 

அடித்துத் திருப்பிப்

 

பிடித்துப் பிசைந்து

 

அடுக்கியிருக்கும்

 

மனிதமாவுருண்டைகள்

 

விரும்பும் விதத்தில்

 

வேண்டிய வடிவில்

 

வளைத்துப் பிடிக்கும் பக்குவம்

 

அவன் கையில்...

 

விதவிதமாக வீசி எறிந்து

 

வீச்சு ரொட்டி

 

கொத்திப் புரட்டிக்

 

கொத்து ரொட்டி

 

பிடித்துப் புரட்டிப்

 

புரோட்டா தட்டிää

 

வட்டமாய் வெட்டித்

 

தட்டு ரொட்டி....

 

எனப்பல பண்டங்கள் போலப்

 

பிண்டங்கள்ஆகினோம்..

 

பல்சுவை ஆகினோம்

 

சிலர் கருகியும் போயினோம்...

 

ஆயினும்ää

 

அடுப்பில் கிடந்து வேகுதலேää

 

அனைவருக்கும் விதியன்றோ..

 

0

 

 

அகத் தீ

 

 

கொழுத்திப் போட்டது

 

கொழுந்து விட்டெரிகிறது

 

தீபமாய் எரிந்ததுää

 

தீப்பற்றிக் கொண்டது

 

சுடராய்த் தொடங்கியது

 

சு10ழ்ந்து பற்றிப்

 

பரவி விட்டது.

 

சில காலம்

 

நீறு பூத்திருந்தது

 

இன்று

 

நெருப்பாய் எரிகிறது

 

காழ்ந்து எரிந்துää மனக்

 

காடு முழுவதும்

 

கருகி விட்டது

 

தணியாமல்ää

 

கனன்று கொண்டே இருக்கிறதுää

 

உன்னைப்ää’பற்றி

 

என்னில் பற்றிய

 

நினைவுப் பெரு நெருப்பு.

 

0

 

நரகின் நகரம்

 

 

சுழலும் புயலுக்குள்

 

ஒருசிறு துரும்பு

 

பொங்கும் எரிமலைக்குளம்புக்குள்

 

ஒரு சிற்றெறும்பு

 

விழுங்கவரும் சுனாமிக்குள்

 

ஒரு ஓட்டைப் படகு

 

திரும்பிய பக்கமெல்லாம்

 

விரும்பியவாறு

 

அறை விழுகிறது

 

ஒரு ஈ தன் இறைக்கையில்

 

தீயைச் சுமக்கிறது

 

ஒரு மலர் தன் இதழில்

 

மலத்தைப் பூசிக் கொள்கிறது

 

நன்றி கெட்ட நாய்

 

நிம்மதியாய் சிரிக்கிறது

 

பன்றிக் கூட்டம்

 

பல்லைக் காட்டுகிறது

 

எல்லாம் சு10ழ வரும்போது

 

எதற்காகச் சிரிக்கிறேன்...

 

அன்பே...

 

0

 

 

நிராசை

 

 

நீ முடவன்....

 

அதுகொம்புத்தேன்...

 

ஏற முயலாதே....

 

நீ குருடன்

 

அது எழில் ஓவியம்

 

பார்க்க முயற்சிக்காதே..

 

நீ ஊமை

 

அது மெல்லிசை

 

பாடப் போகாதே...

 

நீ மூளி

 

அது முழு சிற்பம்

 

செதுக்க நினையாதே..

 

நீ எறும்பு

 

அது வெண்ணிலவு

 

அன்னார்ந்து பார்த்து

 

ஆறுதல் கொள்..

 

அவ்வளவுதான்...

 

0

 

தீரா வழக்கு

 

 

பிரார்த்தியுங்கள்..

 

பிடரி நரம்புக்கு

 

அருகில் இருக்கிறேன் என்றாய்

 

இடர் வரும்போது

 

எங்கே சென்றாய்...

 

அழையுங்கள்

 

பதில் தருகிறேன் என்றாய்

 

துயரத்தில் உழல்கையில்

 

உன்னைக் காணோம்..

 

கேளுங்கள் தருகிறேன்

 

என்றாய்..

 

ஏந்திய கரங்களில்

 

ஏமாற்றமே நிரப்பினாய்..

 

ஆயின்ää

 

சுஜுதில் வைத்த நெற்றி

 

சும்மா எழுந்து விடுமோ?.

 

தலையை உயர்த்து

 

தருகிறேன்என்று நீயொரு திருவாக்குச்

 

சொல்லும் வரையிலும்..

 

0

 

திக்ருப் பூக்கள்

 

 

நெற்றியை நிலத்தில்

 

வைக்கின்றேன்..

 

தலை மேலே

 

சுற்றிய மலக்கைக்

 

காண்கின்றேன்..

 

திக்ருப் பூக்களால்

 

ஒற்றியää

 

என்னுயிரைக்

 

கைப்பற்றிய வானவரேää

 

எவ்வழி

 

கொண்டு செல்வீர்..?

 

வற்றிய அஞ்ஞான

 

இருட்பாதை தவிர்த்து

 

முற்றிய ஞான

 

ஒளி வழி சென்றுää

 

ஒப்படைப்பீராயின்ää

 

ää இஸ்ராயீலேää

 

அந்த

 

வெற்றியை உம்மிடம்

 

சொல்லிக் களித்திருக்கும்

 

என் ஆன்மா..

 

0

 

ஏக்கம்

 

பளபளக்கும்

 

பளிங்குத் தெருக்கள் அங்கே

 

மகரந்தப் புழுதியுடன்

 

மஹ்மூதர் நடந்த

 

மதினத்து வீதிகள் எங்கே

 

மினுமினுக்கும்

 

மாடங்கள் உயர் கோபுரங்கள் அங்கே

 

ஈச்சோலை வேய்ந்து

 

மண்தரை மீதுறங்கிய

 

மன்னரின் குடிசை எங்கே

 

கலகலக்கும்

 

கருப்புக் கல் மாடங்கள் அங்கே

 

கருணையாளரின் கையிலிருந்து

 

கலிமா மொழிந்த கூழாங்கற்கள் எங்கே

 

மதினா இங்கேää

 

மாண்புறு நபிகளின்

 

மதிää நா எங்கே...

 

0

 

 

ஆமீன்

 

எந்த மரத்தின்

 

எந்தச் சருகு

 

எந்த நேரத்தில்

 

உதிரும்...

 

எந்த மனிதரின் இதயம்

 

எந்தக் கணத்தில்

 

ஓயும்..

 

என்ற கணக்கு

 

எல்லாம் எழுதியவனே

 

எங்கள் ரசு10லின்

 

திருச் சந்நிதியில்

 

எந்தன் பாதங்கள்

 

எட்டும் முன்னர்

 

எந்தன் திகதியை

 

கிழித்து விடாதே..

 

ஏகனே..

 

0

 

 

ரூஹின் தயாரிப்பு

 

 

@ செய்கிறேன்

 

உள்ளம் உணரவில்லை

 

முஸல்லாவை விரிக்கிறேன்

 

மனம் மகிழவில்லை

 

தக்பீர் கட்டுகிறேன்

 

தன் நினைவில்லை

 

ருக்கூவில் குனிகிறேன்

 

ரப்பைக் காணவில்லை

 

சுஜூதுக்கு போகிறேன்

 

சுபஹானல்லாஹ் சொல்லவில்லை

 

இருப்புக்கு வருகிறேன்

 

இருந்ததையும் மறக்கின்றேன்

 

ஸலாம் சொல்கிறேன்

 

ஸலாத்தை செய்யவில்லை

 

பாவி மனம்

 

பரமனை தேடவில்லை

 

இனி ஒன்றும் செய்வதற்கில்லை

 

ஆற்றில் விழுந்த ஆன்மாவை

 

அழைத்துச் செல்ல

 

இஸ்ராயீலே

 

இனி நீர் வருக...

 

0

 

 

உயிர்கொள்க

 

 

அழத்தேவையில்லை

 

ஆருயிர் நண்பனே....

 

அடிக்கழுவிக் குளிப்பாட்டிக்

 

கபனிட்டுக் காரியங்கள் முடியத்

 

தூக்கிச் சந்தூக்கில் வைத்துச்

 

சுமந்து செல்லுங்கள் என்னை..

 

ஆஹா...

 

ஆறடிக் குழி...அற்புதம்.

 

ஆரும் கூட வராத அந்தகாரம்..

 

ஆழத்தில் வைத்து

 

ஆளுக்கு மூன்றுபிடி

 

மண் எறிந்து மூடுங்கள்..

 

பசுந்தளிர்கள் நட்டு

 

பிரார்த்தனை செய்து...

 

அப்புறம் கலைந்து செல்லுங்கள்

 

ஏழடி நீங்கள்

 

சென்ற பின்னே

 

நான் உயிர்கொள்

 

கணம் வரும்..

 

நடந்ததை எப்படி

 

நானுனக்குச் சொல்வேன்..

 

நண்பனே..?

 

0

 

 

தரிசிப்பு

 

 

மண்ணறைக்குள்

 

உறங்கும் என்னைப்

 

பார்க்க வந்தாயா மகனே...வா..

 

மண்ணுக்கு மேலே

 

நடப்பதெல்லாம் எனக்குச்

 

சொல்ல வந்தாயா..

 

மண்ணுக்குக் கீழே

 

நடந்ததையெல்லாம்

 

என்னைக் கேட்க வந்தாயா..

 

நீ சொல்வது நன்றாக கேட்கிறது

 

நான் சொல்வது உனக்கு கேட்காது..

 

நீ சொல்லியும்

 

நான் சொல்லியும்

 

ஒரு பயனும் இல்லை மகனே..

 

கபுர் மண்ணைக் கூட்டி

 

பசும் தழைகள் நட்டுää

 

எனக்காக ஒரு பிரார்த்தனை செய்துவிட்டுப்

 

புறப்படு.

 

நீ வந்ததற்கு

 

நன்றியடா மகனே..

 

0

 

ஒஸிய்யத்

 

 

அழவேண்டாம்

 

அடுத்துச் செய்யவேண்டிய

 

அலுவலைச் செய்க..

 

உயிரை

 

விடுத்துக் கட்டிலில்ää

 

படுத்துக்கிடக்கும்

 

என்னுடலைää

 

எடுத்து நீர் அள்ளிக்

 

குளிப்பாட்டிக் கபனாடை

 

உடுத்துச்

 

சந்தூக்கில் வைத்துää

 

எடுத்துச் செல்க

 

விரைவாய்..

 

தொடுத்துச் சில

 

திருமறை வசனம் ஓதித்

 

தொழுது கொள்ளுக

 

அடுத்துக்

 

கபுருக்குள்

 

அடக்கிச் செல்கையில்ää

 

விடுத்துக் குறைகளை

 

என்

 

நிறைவுகளை மட்டும்

 

எடுத்துப் பேசுக..

 

என் இனிய தோழர்களே..

 

0

 

 

நானே நான்

 

 

இப்றாஹீமின் கத்திக்கு

 

கழுத்தைக் கொடுத்த

 

ஆடு நான்

 

ஸாலிஹ் நபிக்காக

 

பாறை பிளந்து வந்த

 

ஒட்டகம் நான்..

 

குகைவாசிகளுக்காக

 

குகை வாசலில்

 

கால்கள் விரித்துக்

 

காவல் கிடக்கும்

 

நாயும் நான்..

 

தௌர் குகையின் வாயைத் தைத்த

 

சிலந்தியும் நான்.

 

ஒரு பொழுதில்

 

உலகை அழித்து

 

விடுவேன் நான்..

 

0

 

 

கல்வத்

 

 

உற்று உணர்ந்து குருவின்

 

உபதேசம் பெறுவது

 

முதல் வழியாகும்..

 

முற்றும் துறந்து

 

மூலப் பொருளை நாடுதல்

 

சாதகர் நிலையாகும்

 

பற்று அறுத்த நிலையில்

 

பரமன் நினைவே உறுதுணையாகும்..

 

சற்றும் கவனம் சிதறாது

 

சாதனை செய்தல் அறமாகும்

 

சித்துக் கிடைப்பது அவனின்

 

திருவுளமே ஆகும்..

 

முற்றும் நம்பிய முயற்சி

 

திருவினை ஆகும்..

 

 

கற்றுத்தந்தகுரு

 

கல்புக்குள் எறிவது

 

சிறு விதையாகும்

 

வித்து முளைத்தொரு நாளில்

 

பெரு விருட்ஷம் ஆகும்...

 

உற்று உணர்ந்து பார்க்க

 

உலகின் ஆட்சி உனதாகும்..

 

சித்தி பெற்ற பின்னே

 

எத்தி சையும் காண்பது

 

அவன்முகம் ஆகும்..

 

0

 

பாம்பின் கதை

 

 

நச்சுப் பாம்பே

 

நபித்தோழரின்

 

கால்களை ஏன் தீண்டினாய்...

 

அண்டம் புகழும் அபூபக்கர் அவர்

 

அந்தஸ்து அறியாயோ நீ..

 

அறிவேன் அறிவேன்

 

ஆயின்ää

 

ஆயிரம் வருஷம் அடியேன் இக்குகையில்

 

பாம்பாகிப் பார்த்திருந்தேன்

 

பூமான் நபி பிரானின்

 

பூமுகத்தைக் காண

 

குகைக்குள் வந்தனர் கோமான்..

 

கூட வந்தவரோ குகையின்

 

ஓட்டைகளை ஒவ்வொன்றாக

 

அடைத்துவிட்டார்

 

ஒரே ஒரு ஓடடை அடைக்க

 

ஒன்றுமில்லாத போது

 

அந்த இடத்தை அவர்தம் குதிகாலால்

 

குத்தி அடைத்து விடடார்

 

 

பூமான் நபியின்

 

பூமுகம் காண முடியா

 

ஏக்கத்தை ஏமாற்றத்தை

 

என்னவென்பேன்

 

எந்தலர் முகத்தை

 

எட்டியும்பார்க்க இயலவில்லை..

 

குதிகாலைக் கொஞ்சம்

 

தீண்டி விட்டேன்

 

துடித்துப் போன நபித்தோழர் கொஞ்சமும்

 

குதிகாலைஅசைக்காது

 

கடித்துப் பல்லை

 

சகித்துக் கொண்டு இருக்க

 

அவர் கண்ணில்

 

வடிந்த நீர்த்துளி

 

நபிகள் பூமுகத்தில் விழ

 

கண்விழித்த பெருமான்

 

தோழர் காலை எடுத்து

 

உமிழ்நீர் தடவிய அக்கணத்தில்

 

கண்டேன் எங்கள்

 

காருண்ய நபிமுகம்

 

காணக் கிடையாத்திருக் காட்சி..

 

பல்லாண்டுத தவம்

 

பலித்தது

 

பெருமான் மீதினிலே

 

பெருவிசுவாசம் கொண்டேன்..

 

நபித்தோழரே

 

நம்மை மன்னித்தருள்க..

 

0

 

வேண்டுகோள்

 

 

எழுதிக் கொண்டிருக்கும்

 

வானவரேää

 

ரகீப் அதீதே..

 

எந்தன் தோள்களில்

 

ஏறிஇருந்துகொண்டு

 

அறுபது வருஷமாக

 

அந்தப் பட்டோலையில்?

 

ஒரு கணமும்

 

ஓயாத எழுத்து

 

ஒரு புள்ளியும் விடாமல்ää

 

தலையில் எழுதப்பட்டதை

 

மீண்டும்

 

தோளில் எழுதுவதா..

 

என்னவாகிலும்

 

எழுதிக் கொள்ளுங்கள்ää

 

ஆயின்ää

 

பூமான் நபிகளைப்

 

புகழ்ந்து இவன்

 

சோபனம் சொன்னதை மட்டும்

 

சற்றுப் பெரிய எழுத்துக்களில்

 

கட்டாயம்

 

பதிவு செய்து கொள்க

 

கண்மணிகளே..

 

0

 

நபி நேசம்

 

 

பாலையில் நபிகள் செல்ல

 

மேலே

 

நிழலிடும் மேகமாய் தொடர்வேன்..

 

சோலையில் நபிகள் இருக்கப்

 

புகழ்

 

சோபனம் பாடிக் களிப்பேன்

 

மாலையில் நபிகள் நடந்தால்ää

 

அவர்களைத்

 

தாங்கிடும் பாதணி ஆவேன்

 

ஏழையாய் நபிகள் இருக்க

 

இரங்கி

 

வடித்திடும் விழிநீர் ஆவேன்..

 

போரினில் நபிகள் செல்ல

 

ஏந்தும்

 

வீரப் போர்வாள் நானாவேன்

 

நுதலில் இலங்கிடும் நூரினில்

 

எழில்மிகு

 

நபித்துவம் கண்டுமகிழ்வேன்

 

பாரினில் அவர்களைப் பார்த்திடப்

 

பாவி

 

எனக்குப் பாக்கியம் இல்லையே..

 

நேரினில் நபிகளைக் கண்டால்

 

நேசத்தால்

 

அக்கணமே என்னுயிர் நீப்பேன்..

 

0

 

 

முத்திரையிடப்பட்ட மது

 

 

ஏந்தி நிற்கின்றேன்

 

என் கல்புக் கிண்ணத்தை..

 

மோகத்தால்

 

மையல் கொண்டு

 

தாகத்தால்

 

தன்னிலை மாறிää

 

அருந்தும்

 

வேகத்தால்

 

வெறி கொண்டு

 

தீராப் போதையில்

 

விழிகள் சிவக்க

 

மாறாக் காதலில்

 

மயங்கித் தள்ளாட..

 

நிரப்புங்கள்

 

என் கல்புக் கிண்ணத்தை

 

உயர் கஸ்தூரியினால்

 

முத்திரையிடப்பட்ட

 

அந்த

 

முக-மது..

 

0

 

 

குருமொழி

 

 

குருவாய்க்

 

கருணைஉருவாய் வந்து

 

ஒருவாய் அருளுரை

 

திருவாய் மலர்ந்து

 

அருள்வாய் எனச்

 

சிறு வாய் புதைத்து

 

மெய்வாய் பொத்திப்

 

பணிவாய்த்

 

தலைகுனிவாய்க்

 

குகைவாய் நிற்கத்..

 

தேடுவாய் மனக்குகை உள்ளே

 

அறிவாய் நப்ஸை

 

அதற்காய்

 

நல்ல குருவாய்

 

நாடுவாய் போவாய்..

 

நல்ல கருவாய்

 

இருப்பாய் எனின்ää நிச்சயம்

 

பெறுவாய் எனக்

 

கனிவாய்க் கூற

 

ஆஹாää

 

அதுவே

 

விதியாய் அடைந்தேன்..

 

0

 

 

சத்திய சோதனை

 

 

எத்தனை சோதனை

 

தந்தெனை சோதித்துப்

 

பார்த்தனை

 

அத்தனை சோதனையிலும்

 

சித்தியோ நான்.?

 

எழுதிய தாள்கள்

 

எத்தனையெத்தனை..

 

திருத்திய பாடத்தில்

 

எத்தனை புள்ளி..

 

எழுதுகோலும் மைக்கூடும்

 

உலர்ந்து போய்

 

எழுதிச் சென்றது

 

விதியின் கையோ

 

அன்றி என் கையின் விதியோ...

 

கத்திமேல் நடக்கின்ற

 

சத்திய சோதனையிற்

 

சறுக்கி வீழுவேனோ..

 

அன்றிச் சித்தி பெற்றுயர்தரம்

 

செல்வேனோ..

 

பட்டோலையைப்

 

பார்த்துச் சொல்லுதல்

 

யாரால் கூடுமோ..?

 

0

 

 

அலிப்

 

 

ஒரு நுக்கத்தின் நீட்சி

 

அலிப்..

 

எழுத்துக்களின்

 

தலையெழுத்து அது

 

ஆதமாய் எழுந்து

 

நின்றதும் அலிப்..

 

ஹிரா குகையில் வந்து

 

இக்ரஹ் என்றது..

 

எழுது என்றதும்

 

எழுதுகோலானது அலிப்

 

அஹ்மதின் முன்னே

 

முதலெழுத்தாய் ஆனது

 

காலையிலும் மாலையிலும்

 

தன் நிழலை நீட்டுகிறது அலிப்

 

தொழும் போது

 

நிலையில் நிற்கின்றது

 

ஈமானைக் காக்கும்

 

உருவிய வாள் அது...

 

அலிபுக்குள் அடங்கும்

 

அண்டங்கள் யாவும்.0

 

0

 

கவிதைப் பறவை

 

 

நீ

 

என் கவிதைப்பறவை

 

நீ சிலிர்க்கும் போதெல்லாம்

 

உதிரும்

 

சொற்களைப் பொறுக்கித்

 

தினமொரு

 

கவிதை எழுதுகிறேன்

 

நீ

 

கொத்திக்கொத்திப் போடும்

 

எழுத்துக்களைக் கோர்த்து

 

ஒரு கவிதைக்கூடு செய்கிறேன்..

 

நீ

 

கொக்கரிக்கும் இசையில்

 

என் பாடல் விருது பெறுகிறது

 

என்னை உன்

 

இறகுகளுக்குள் அடைகார்த்து

 

கவிதைக்குஞ்சுகளைப்

 

பெற்றெடு..

 

வா

 

என் வாசலுக்கு

 

வந்து கூவு.

 

0

 

வலி

 

 

ஆறாத காயம் இது

 

ஆகுமா உனக்கு..

 

ரணம் தாக்கி

 

ரத்தம் வடிவதை

 

ரசிக்கின்றாயோ..

 

நிணம் வடிந்து

 

நனைவதை நினைத்துச்

 

சிரிக்கின்றாயோ

 

உச்ச வேதனையின்

 

உளரல்கள்

 

உனக்குச் சம்மதமோ..

 

உள்ளிருந்து உருகும்

 

ஆத்மாவை வதைப்பாயோ

 

இன்னும்

 

என்ன செய்ய உத்தேசமோ..

 

கைதூக்கி அணைத்துக்கொள்

 

அன்றேல்ää

 

வெந்நரகில் விட்டுவிடு..

 

0

 

கல்பு

 

 

ஒளிவர வழியில்லை

 

வெளிவரத் தெரியவில்லை

 

கருநிழல் கழியவில்லை

 

கருவிழி விரியவில்லை

 

தனியிருள் தணியவில்லை

 

தன்னொளி தெரியவில்லை

 

வரும்வழி புரியவில்லை

 

வருவதும் சரியில்லை

 

ஒளிர்வதும் ஒளிரவில்லை

 

ஒன்றுமே கிடைக்கவில்லை

 

அருள்விழி அருளவில்லை

 

இருள் இன்னும் விலகவில்லை.

 

0

தேடுகளம்

 

 

இறையில் இலயித்தொரு

 

இருப்பில் இருந்தென்

 

கல்பைப் பிழிந்துக்

 

கலிமா மொழிந்துää

 

சுபஹ_வரைக்கும்

 

சுஜூதில் கிடந்து

 

இதயம் கரைய

 

இரந்து உருகிää

 

ஓதி

 

ஓயாத் திக்ரில்

 

ஒன்றியும்ää

 

திருக்காட்சி தெரியவில்லை

 

அப் பொருட்காட்சி புரியவில்லை

 

இச்சை அடக்கிச்

 

சட்டை கிழித்து

 

மூச்சை நிறுத்தி

 

மரத்துக்கிடக்கும்

 

கணத்திலாவது அந்த

 

அகக்காட்சி காண்பேனோ.

 

 

அதற்கொரு

 

கருணை பிறக்குமோ...?

 

0

 

சுமைகள்

 

 

எத்தனை மூட்டைகள்

 

எந்தன் முதுகில்

 

பாரம் அழுந்திப்

 

பாதி மடங்கிய உடம்பு

 

பச்சைப் பொய் புளுகு மூட்டை

 

இச்சைமிக்க விபச்சார மூட்டை

 

வம்பு வட்டியில் வளர்ந்த மூட்டை

 

புறம்பேசிப் பெருத்த தொரு மூட்டை

 

தற்பெருமையில் தலை கனத்த மூட்டை

 

இரத்த உறவை இழித்துரைத்த ஒரு மூட்டை

 

பெற்றவரை விரட்டிய பெரு மூட்டை

 

உயிரினத்தைக் கொன்றொழித்த ஊன் மூட்டை

 

பயிரினத்தை பிடுங்கி எறிந்த பாவ மூட்டை

 

இன்னும்

 

இனந்தெரியா வகைவகையான

 

சிறு சிறு மூட்டைகளைச்

 

சேர்நதொன்றாய் கட்டியதொரு பெரு மூட்டை

 

எத்தனை மூட்டைகள்

 

எந்தன் முதுகில்

 

 

பாரம் அழுந்தி

 

பாதி மடங்கிய உடம்புடன்

 

ருக்கூவில் குனிகிறேன்

 

அதன் தத்துவம் உணர்கிறேன்

 

சுமையை இறக்கிச்

 

சுகமளி எனச்சொல்ல யாருளர்...

 

தத்தம் சுமைகளுடன்

 

தலை கவிழ்ந்த மானுடருள்

 

என் சுமையை

 

தான் சுமக்க யாருளர்...?

 

ஆயின்....

 

ஒரே ஒரு சொல்லை மட்டும் நம்பிச்

 

சுஜூதில் விழுந்து

 

பாவி ஊர்ந்து வருகிறேன்

 

பரமன் வாசலுக்கு

 

 

யா .... ஒபூருல் வதூத்......!

 

0

 

 

சிறைக் கூண்டு

 

உடல்க் கூண்டுக்குள்ளே

 

ஒளிந்திருந்து...

 

மூச்சுப் பிடிப்பதுவும்

 

காற்றுக் குடிப்பதுவும்

 

எத்தனை நாளைக்கு...

 

சிறைப்பட்டிருத்தல் என்பது

 

சிறகு முளைக்கும் வரைதான்...

 

கூண்டுக்குள்ளே சிறையிருந்தும்

 

சிறையென அறியாது..

 

நீ கூண்டை ஆண்ட

 

ஆண்டை கூறுவாயா.?

 

ஒரு நூறுவருஷமா.....

 

ஒரு கணப் பொழுதா....

 

இந்த வருடத்தின்

 

பரா அத் ரொட்டியில்

 

உன் பெயர் இல்லை என

 

உனக்கு யார் சொன்னது.?

 

நீ விட்டு விடுதலையாகி

 

இந்தக் ககன வெளிதனில்

 

சட்டென்று பறந்துவிட

 

நீ வசித்திருந்த இந்தக்

 

கூண்டை புதைக்கும்

 

ஆண்டை ஆரறிவர்..?

 

0

 

நாளைக்குப் பெருநாள்

 

 

வானம்

 

விண்மீன் ஜரிகை உடுத்தி

 

பிறைச் சிமிக்கியும் அணிந்தது

 

குரோட்டன்கள்

 

மருதாணிக் கைகளை

 

விரித்துக் காட்டிச் சிரித்தன

 

வண்ணத்துப் பூச்சிகள் கூட

 

வர்ணச் செட்டைகள் மாற்றிப்

 

பறந்து திரிந்தன.

 

என் மகளும்

 

புதிதாகத்

 

தைத்துக் கொண்டிருந்தாள்

 

தாவணியில்

 

பழைய

 

பொத்தல்களை....

 

0

 

 

கையறும் கணம்....

 

 

இஸ்ராயீல் வந்தென்

 

பூவுயிர் பறிக்கையில்

 

இறைத்துதி செய்வேனோ...

 

குளிப்பாட்டும் போது நான்

 

குரலெடுத்துப் பாடுவேனோ...

 

கபனிடும் வேளையில் ஒரு

 

கவிதை எழுதுவேனோ..

 

சந்தூக்கில் வைக்கும் நேரம்

 

சரித்திரம் பேசுவேனோ....

 

நாலு பேர் தூக்கும் போது

 

நல்ல படம் பார்ப்பேனோ..

 

குழிக்குள் வைக்கும் வேளை

 

குயிலோசை இரசிப்பேனோ..

 

மீஸான் கட்டைகள் ஊன்றும் போது..நான்

 

மீசை முறுக்குவேனோ..

 

மண்கூட்டி அதன் மேல்

 

பசுங்கொடிகள் நடும்போது

 

பழங்கனவு காண்பேனோ..?..

 

ஆமீன் சொல்லி ஆட்கள்

 

ஏழடிசென்ற பின்

 

ஆறடிக்குழி

 

அரை அங்குலமாய் சுருங்கிடுமோ

 

அறுபதடியாய் விரிந்திடுமோ...

 

ஆரறிவர்.?

 

0

 

 

மாறாவிதி

 

 

மலர் ஒன்று தந்தாய்

 

மணக்கும் முன்னே

 

மளுக்கெனக் கையை முறித்தாய்

 

கனவு ஒன்று காண் என்றாய்

 

காணும் முன்

 

கண்களைக் குத்தி விட்டாய்..

 

வாசிக்க நூல் ஒன்று தந்தாய்

 

புரட்ட முன்

 

வார்த்தைகளை அழித்து விட்டாய்

 

விதி இதுவெனச் சொல்லிää

 

இதைத் தலையில் எழுதிவிட்டாய் ..

 

தவித்தலையும் என்னைத்

 

தள்ளியிருந்து

 

பார்த்துச் சிரிக்கிறாய்..

 

தகுமோ இதுவென

 

தனித்திருந்து தஹஜ்ஜத்தில்

 

அழும்போது

 

துன்பத்துடன்

 

இன்பம் இருக்கிறது

 

நிச்சயமாகத் துன்பத்துடன்

 

இன்பமிருக்கிறதென

 

ஒரு திருவாக்குச் சொல்லிவிடடாய்...

 

0

 

வலைப்பின்னல்

 

 

சுலைமான் நபிக்காக

 

_த் ஹ_த் தாக மாறி

 

பல்கீசை பார்த்து வந்தேன்...

 

மீனாக உருவெடுத்து

 

யூனுஸ் நபியை

 

வயிற்றில் சுமந்து கொண்டு

 

சுற்றித் திரிந்தேன்

 

சின்னஞ் சிறு சிட்டுக்களாய்

 

அவதரித்து

 

தாவூது நபியுடன் சேர்ந்து

 

சங்கீதம் பாடிக் களித்திருந்தேன்

 

சாலிஹ் நபிக்காக

 

பாறையை பிளந்து

 

ஓட்டகை உருவெடுத்தேன்

 

 

குகை வாசிகளுக்காக

 

குகை வாசலில்

 

கால்களை விரித்து ஒரு

 

நாயாய் காவலிருந்தேன்

 

வெள்ளாடு உருவெடுத்து

 

இப்ராஹிம் நபி அறுக்க

 

கழுத்தைக் கொடுத்தேன்

 

ஆயின்

 

இவற்றிலெல்லாம்

 

பெருமை கொள்ளேன்..

 

கண்மணி இரஸ_லைக்

 

காப்பாற்ற

 

தவ்ர் குகையின் வாசலை

 

சுற்றிப் பின்னிவிட்டு

 

சிலந்தியாய் அமர்ந்தேனே

 

 

அதில்தான்

 

கதிமோட்ஷம் அடைந்தேன்..

 

0

 

 

மஹ்ஸர் வெளி

 

 

விரைவில்

 

விசாரணை முடிந்தது...

 

இடது கையில் பட்டோலை

 

எப்படி வந்தது...

 

இழுத்துச் செல்க....

 

கட்டளை பிறந்தது

 

மாளிகைகள் போல்

 

ஜூவாலைகள் எறிந்து

 

கழுதையாய் கத்திக்

 

கங்குகள் கக்கும் கிடங்கு நோக்கி....

 

வயிற்றால் ஊர்வதன்றிக்

 

கடுதில் நடக்கக் கால்கள் ஏது.?

 

மின்னல் வேகத்தில்

 

கடக்கத்தான்...நன்மை ஏது..?

 

யார் வருவார் காப்பாற்ற..?

 

எல்லா நபிமாரும் கைவிட்ட பின்

 

கைதூக்கிக் கரை சேர்க்க யாருளர்......

 

விக்கித்து வெம்பி

 

வேதனையில் அழுது..

 

நெருப்புக் கிடங்கில்

 

சறுக்கி விழும் அக்கணம்....

 

அன்புடன் ஒரு கருணைக் குரல்

 

அழைக்கும் ஒலி.....

 

யா உம்மத்தீ....

 

யா உம்மத்தீ.....!

 

0

 

 

திருச் சுட்டுவிரல்

 

 

வட்ட நிலவை

 

வெட்டிப் பிளந்த ..அந்தச்

 

சுட்டு விரலை

 

தோழருக்குப்

 

பட்ட விஷத்துக்குத்

 

தன் உமிழ்நீரைத்

 

தொட்டு வைத்த..அந்தச்

 

சுட்டு விரலை

 

தகித்த பாலையில்

 

தாகித்து தவித்த

 

தம் படையினருக்கு

 

நீர் பெருகிடச் செய்த

 

அந்தச் சுட்டு விரலை

 

காதலரசி கதீஜாவின்

 

கண்ணீர் துடைத்த அந்த

 

சுட்டு விரலை

 

கண்மணிகள் ஹஸன் ஹ_சைன்

 

கைப்பிடித்து நடந்த அந்தச்

 

சுட்டு விரலை

 

சிறிது

 

தொட்டு முத்தமிடத்

 

துடிக்கிறேன்

 

என்னருமை நாயகமே....

 

0

 

மரித்தவனின் மரண வாக்குமூலம்

 

 

தொலைதூரம் போகிறேன்

 

தோழி

 

எழுதிய கவிதைகளை

 

எரித்து விடு

 

தூதுவந்த புறாவையும்

 

துரத்தி விடு

 

காலப் பயணம் போக

 

கடுகதி ரதம் ஏறிவிட்டேன்

 

கண்ணிமைப் பொழுதில்

 

கடந்து சென்றுவிடுவேன்

 

பற்று வைத்த பாசத்தை

 

பற்றறுத்து விடு

 

உயிர்த்தெழுந்த அன்பை

 

உள்ளத்துள் புதைத்து விடு

 

தறிகெட்டுப் பாயும்...என்

 

ரூஹ_ப் புரவியை

 

அடக்கிச் சவுக்கால்

 

அடித்துச் சவாரி செய்த படி

 

புறப்பட்டு விட்டேன்..

 

மாபெரும் போர்க்களம் நோக்கி

 

மரிக்கும் முன் மரித்தவனாய்

 

என்னை ஆக்கி..

 

ஆதலால்ää

 

தேடாதே தோழி

 

தொலைதூரம் போய் விட்டேன்..

 

00

 

 

உயிரஞ்சல் அலுவலகம்

 

 

இஸ்ராயீல் தபாலதிபருக்கு

 

ஒருபோதும் ஓய்வில்லை

 

மனதில் இரக்கமுமில்லை

 

மானுடத் தபால்களுக்கு

 

மரண முத்திரை குத்தி

 

சவத் தபாற்குழியில்

 

அவசரமாய்ப் போட்டு விட

 

அவர் தயங்கியதில்லை..

 

காற்றடைத்த தபால் பைகளை

 

கடுகதியில் ஏற்றியனுப்ப

 

சந்தூக்கு வண்டி இதோ

 

சடுதியில் வந்துவிடும்

 

நாலுபேர் தூக்கி

 

நடுவில் வைத்து விடலாம்

 

ஆயின்ää

 

தபால்களைத் தரம் பிரிக்கவும்

 

சொர்க்கääநரக விலாஸமிட

 

அவருக்கும் சுதந்திரமில்லை..

 

 

நற்செய்தி எழுதியவை

 

நரகத்துக்கும் போய் விடலாம்

 

சுபச் செய்தி சொல்லியவை

 

சொர்க்கம் போகாமலும் விடலாம்.

 

விபச்சாரம் செய்தவை

 

விமானத் தபால் ஏறிடலாம்

 

அபச்சாரம் சொல்லியவை

 

ஆழ்நரகு கடந்திடலாம்

 

விலாசம் தவறியவை

 

விரைவில் திரும்பிடலாம்

 

 

சுஜூது செய்தவை

 

சோபனமும் பெறலாம்

 

அழுதவை தொழுதவை

 

முழுவதும் மீண்டிடலாம்

 

எந்தத் தபால்

 

எவ்விடம் சேருமோ...?

 

0

 

 

திருப்பாதம் தாங்கி

 

 

முஹம்மதியப் பேரொளியை

 

முகத்தில் பூசி

 

முத்தே முழுமதியே எனப்பதறித்

 

திருப்பாதம் இரண்டிலும்

 

முத்தமிட்டு

 

மூச்சை விட்டு விட துடிக்கிறேன்

 

கண்மணியே நாயகமே

 

கண்மணியே நாயகமே

 

கல்புக்குள் வாழுகிற

 

காதலரே..எனக்கதறிக்

 

கால்களில் விழுந்து

 

கண்ணீரால் கழுவிடப் பதறுகிறேன்

 

ரஹ்மத்துல் ஆலமீனே...

 

ரஹ்மத்துல் ஆலமீனே

 

ரகசியப் பொக்கிஷமே..தங்கள்

 

பாதம் தாங்கிப்

 

பாக்கியம் பெற்ற

 

பாதரட்சையாய் ஆகிடப்

 

பரிதவிக்கின்றேன்

 

புனிதரே எங்கள் பூமானே..

 

புனிதரே எங்கள் பூமானே

 

புகழோனின் திருத்தூதரே

 

பக்கம் வந்துங்கள்

 

பாதம் தாங்கி என்

 

தலையில் வைக்கத்

 

தவிக்கின்றேன் என்

 

தங்கமே இரஸ_ல் நபியே...

 

0

 

 

கராமத்

 

 

இதுவரை

 

இறைநேசம் பற்றி

 

இனிதே உரையாடினோம்

 

இது தொழுகை நேரம்

 

இரண்டு ரக் அத் தொழுகின்றேன்

 

இதோ பாருங்கள் அன்னையே..

 

முஸல்லாவை உதறி

 

நீரின் மேல் விரித்து

 

மூழ்கிடாமல் தொழுதார்

 

மாண்புமிகு நேசர் பஸ்ரி...

 

அடுத்து அன்னை ராபியா

 

அழகிய விரிப்பை உதறி

 

ஆகாயத்தில் விரித்து

 

அதில் நின்று தொழுத பின்னே

 

அவருக்குச் சொன்னார்கள்

 

நீங்கள் நீரில் தொழுததை

 

நீந்தும் ஒரு சிறு மீன் செய்யும்

 

ஆகாயத்தில் நான் வணங்கியதை

 

அற்ப ஈ கூடச் செய்யும்..

 

அற்புதம் என்பது இவையல்ல

 

அல்லாஹ்வை

 

அணுவளவும் மறக்காதிருப்பதுவே

 

ஆனந்த அற்புதம்..

 

அன்னையின் விளக்கத்தில்

 

ஆயிரம் அர்த்தம் இருந்தது...

 

0

 

ஆத்மாவின் கலகம்

 

 

காவி கட்டிக்

 

காசிக்கு போய் வந்து

 

வேசி வீட்டில்

 

விருந்துண்பேனோ...

 

இஹ்ராம் உடுத்தி

 

ஹஜ்ஜூக்கு சென்று வந்திங்கு

 

ஹராமில் புரள்வேனோ...

 

போதி மரத்தின் கீழிருந்து

 

போதனை பெற்ற பின்

 

சாதி பேதம் செய்வேனோ

 

இயேசுவுக்குள் ஜீவிக்கத்

 

துறவாடை பூண்ட பின்

 

காசுக்குக்

 

காட்டிக் கொடுப்பேனோ...

 

கலகம் செய்யும் ஆத்மாவே

 

உன்

 

உலகம் மிகக் கொடிது..

 

அதனால்ää

 

என் உடலம் துறந்து

 

செத்த

 

சடலம் ஆகிடல் நன்றே...

 

0

 

 

இன்னாலில்லாஹி....

 

 

நேற்று

 

நான் இறந்து போயிருந்தேன்

 

எவரது

 

அஞ்சலியும்

 

இரங்கல் கவிதைகளும்

 

அனுதாபச் செய்திகளும்

 

என்னை அடையவில்லை

 

பள்ளியில் வாசித்த

 

ஜனாஸா அறிவித்தலோ

 

பத்திரிகையில் வந்த

 

மரண அறிவித்தலோ

 

எனக்குத் தெரியாது

 

ஆயின்ää

 

இரகசியமாக

 

நீ சிந்திய

 

ஓர் ஒற்றைக்

 

கண்ணீர் துளியில்ää

 

மண்ணறையில்

 

நான்

 

உயிர்த்தேன் என் அன்பே...

 

0

 

 

ரூஹ_க் கிளி

 

 

எத்தனை காலம்

 

இந்தக் கூண்டுக்குள்

 

அந்தக் கிளி

 

பேசப் பழகி...பின்

 

ஏசப் பழகி

 

வேதனை தந்த கிளி

 

பஞ்சமாபாதகம்

 

பண்ணிய

 

பஞ்சவர்ணக் கிளி..

 

மொத்தமாகப்

 

பாவங்கள் செய்த

 

பெத்தம்மா...

 

மோசடி வித்தைகள்

 

செய்த தத்தை இது..

 

 

வெள்ளை முடி

 

வந்த பின்னும்

 

கொள்ளையடித்த

 

கிள்ளை இது.

 

அஞ்சாமல் பாவத்தைச்

 

சுகமாகச் செய்து வந்த

 

அஞ்சுகம் அன்றோ....

 

பழுதான கூண்டுக்குள்

 

பலகாலம் வாழ்கிறது

 

ஒருநாள் பொழுதில்

 

உரிமையாளன் அழைக்க

 

கூண்டை விட்டுத்

 

தாண்டிப் பறக்கும்-

 

இந்த

 

ரூஹ_க்கிளி..

 

0

வேட்டல்

 

 

கடலுக்குள் வாழ்ந்த மீனின் உடலுக்குள்

 

உள்ள குடலுக்குள்

 

வைத்தொரு

 

நபியைக் காத்து

 

அம்மீன்ää

 

திடலுக்கு வந்து

 

துப்பியதும்ää நபியைச்

 

சுரைக்கொடியின்

 

மடலுக்குள்

 

ஒளித்து வைத்துää

 

அவர்

 

உடலுக்குத் தெம்பு வர

 

அடலுக்கு அறிவித்துப்

 

பால் கொடுத்த

 

கருணைக் கடலுக்கு

 

இரந்து கிடக்கும்

 

என் மீது இரக்கம்

 

வராது விடலுக்குக்

 

காரணம் யாதோ..

 

கருணை பிறக்குமோ..?

 

0

 

 

தீரா வேட்கை

 

 

உலகம் வெறுத்து

 

உணவு ஒறுத்து

 

உச்சிப் பாறைமீது நான்

 

தக்பீர் கட்டித்

 

தனித்து நிற்கவோ..

 

ஹிராக் குகைக்குள்ளும்

 

சுறா வயிற்றுக்குள்ளும்

 

சுருண்டு நான்

 

சுஜூதில் கிடக்கவோ

 

துர்ஷீனா மலையேறித்

 

தூக்கமின்றி

 

நாற்பது இரவு

 

நடு இருப்பில் நானிருக்கவோ..

 

அடர்வனம் நடுவே

 

இடர்தரு பிராணிகளின்

 

இம்சை பொறுத்து

 

ருக்கூஹ் செய்தவாறே

 

ரூஹை விடவோ..

 

என்ன செய்தால்

 

எனக்கருள்வாய்

 

இறைவா...?

 

0

 

ஞானகுரு

 

 

குருவாய் வந்து

 

ஒருவாய் அருளுரை

 

திருவாய் மலர்ந்து

 

அருள்வீர் என்று

 

தவமாய்த்

 

தவமிருந்தேன்

 

தருவீர் காட்சி...நீர்

 

கருணைஉருவாய் எனச்

 

சிறு வாய் புதைத்து

 

மெய்வாய் பொத்திப்

 

பணிவாய்த் தலை

 

குனிவாய்த் தனித்தே

 

இருந்தேன்

 

பெரியீர் தங்கள்

 

உருவில் மாறி

 

வேறோர் வடிவில்

 

வந்தீர் நீவிர் வடிவீர்.

 

பெறுவாய் இதோ வெனக்

 

கனிவாய்க் கூறி

 

ஒருவாய் உமிழ்ந்தீர்...

 

ஆஹா

 

அதுவோர் ஞான ஊற்று..

 

0

 

ஏகாந்தம்

 

 

அடர்வனத்துள்

 

ஆயிரம் ஆண்டு

 

அத்தஹியாத்தில்

 

அசையாதிருப்பேனோ..

 

இடர்தரு

 

இருட் குகையுள்

 

இமை துஞ்சாமல்

 

நடு இருப்பில்

 

நானிருப்பேனோ..

 

மிடர் நீரின்றி

 

மிசை நோக்கி

 

ஹால் நிலையில்

 

காத்து நிற்பேனோ..

 

படர் கொடிகள்

 

படர்ந்து மூடினும்ää

 

விடர்ச் சர்ப்பம்

 

விடாது தீண்டினும்ää

 

சுடர்மிகுமொரு

 

சுந்தரக்காட்சி

 

நான் காணத்

 

தொடர் தவம் துயர்ந்திருப்பேனோ..

 

ஒரு

 

திடமுடிவின்றித்

 

திரிந்தழிவேனோ..

 

0

 

ஜனாஸா எக்ஸ்பிரஸ்

 

 

சந்தூக்கு....

 

யாரும் ஏற விரும்பாத

 

பாரவண்டி

 

சக்கரமில்லா வண்டிதான்

 

ஆனால்

 

வாழ்க்கைச்

 

சக்கரம் முடிந்தோருடன்

 

சுழலும் வண்டி

 

யாருமே

 

சட்டை செய்வதில்லை இதை

 

ஆயின்

 

இதில் ஏற

 

யாருக்கும் ஒரு விஷேட

 

சட்டை செய்வதுண்டு

 

பிரயாணம் செய்ய

 

டிக்கட் தேவையில்லை

 

வாழ்வின் டிக்கட் கிழிந்தால் போதும்

 

இறக்கும் ஆளை

 

ஏற்றும் இறக்கும்...

 

ஏற்றும் ஆளையும்

 

இறக்கும்

 

மயானத்தில்

 

 

ஒற்றைப் பயணி

 

ஒரேயொரு தடவை பயணிக்கும்

 

எரிபொருள் இல்லாத்

 

தனி வாகனம்

 

நெரிசல் இல்லை

 

படுத்தே போகலாம்

 

தோள்களில் சுமந்த

 

சுமைகளை விட்டுப்

 

பிறர்தோள்களில்

 

சுமையாகச் செல்லும் வண்டி

 

தூக்கிச் செல்வோரையும்

 

தூக்காமல் தொடர்வோரையும்

 

தூக்கிச் செல்லும்

 

சந்-தூக்குத் தூக்கி

 

இந்த வண்டிக்காக

 

பயணிகள்

 

காத்திருப்பதில்லை

 

ஆயின்ää

 

பயணிகளுக்காக

 

பள்ளியில் காத்திருக்கும்

 

ஜனாஸா எக்ஸ்பிரஸ்

 

இதுவும்

 

இ.போ.ச.தான்

 

இதில் போறது சவம்

 

0

 

 

போர்த்திக் கொண்டிருப்பவரே

 

 

பூமானேää எங்கள் பெருமானே

 

பூவுலகின் அழுக்குகளை

 

பூசிக்கொண்டு

 

பாவி வந்தேன் தங்கள்

 

பாதத்தை என்

 

கண்ணீரால் கழுவ..

 

கல்புக்குள் உறைந்த

 

கறையைக்

 

கரைக்கும் வழி புரியாமல்

 

கண்மணியே தங்கள்

 

காலடிக்கு வந்தேன்

 

ஓதவில்லைத் தொழவில்லை

 

ஒரு நன்மையும் செய்யவில்லை..திருப்

 

பாதத்தில் விழுந்து

 

திருந்த வந்தேன்..

 

ஏழுலகின் ஒளியே

 

எளிமையின் கிளியே

 

ஒரே முறை

 

ஏறிட்டு என்னைப்

 

பார்த்தருள்வீரோ

 

ஏந்தலரே எம் பெருமானே..

 

0

 

 

வெளி ஆகுக!

 

 

குன் என்றதும்

 

முதலில் வெளியானது

 

வெளியா?

 

வெளியானதால்தான்

 

வெளிஎன்றானதா.?

 

அமா எனும் இருளில் இருந்து

 

வெளிச்சத்துக்கு வந்ததால்

 

அது பெருவெளி ஆனதோ..?

 

வெளியில் இருந்து கொண்டு

 

வெளியை காணுதல் கூடுமோ.?

 

வெளிக்கப்பாலும்

 

செல்லக் கப்பலும் உண்டோ..?

 

தீராவெளி தேடிச்

 

சிறு வெளிச்சம் கொளுத்தி ஒரு

 

மின்மினிப் பூச்சி

 

வெளி இறங்கித் தேடும் போது

 

அதன்மீது

 

வெளி இரங்கிச் சொன்னது

 

முதலில்

 

வெளிமனதில் உள்ளதை

 

வெளியாக்கு..

 

பின்னர்

 

உள்மனதில்

 

அது வெளி ஆகும்.

 

0

 

 

பிரிதலின் நிலை

 

 

ஒளு செய்யும் போதே

 

ஓருயிர் பிரிவதுண்டு

 

தக்பீர் கட்டியதும்

 

தடாலென விழுந்து

 

தவித்துச் சில போவதுண்டு

 

ருக்குஹ் செய்த நிலையில்

 

ரூஹ் பிரிவதும் கண்கூடு.

 

நடு இருப்பில் வர

 

நல்லாத்மா கழன்று விழுவதுமுண்டு

 

எந்நிலையில்

 

எவர் உயிர்

 

எவ்விதம் பிரியுமோ

 

எவ்விடம் போகுமோ..

 

ஆயின்ää

 

சுஜூதில் விழுந்து

 

சிரவணக்கம் செய்யும் போதென்

 

சீவன் போகச் செய்குவையோ..?

 

0

 

 

இடது கைப்பட்டோலை

 

 

ஒன்று விடாமல்

 

றகிப் அதித் வரைந்த வரலாறு

 

எப்படி வாசிக்க...

 

எத்தனை அத்தியாயங்கள்...

 

எத்தனை அநியாயங்கள்...

 

மீசானில் போடத்

 

தீமைத்தட்டு

 

தரையில் தட்டிற்று..

 

கதறிக் கத்திக்

 

குளறும் போதிலே..ää

 

இழிந்த இந்த மானுடம்

 

தெரிந்தோ என்னவோ

 

மொழிந்திருந்த ஒரு கலிமாப்

 

பொழிந்திருந்த பக்கத்தைப் போட்டதும்ää

 

ஆ..

 

தீமைத்தட்டு உயர்ந்தது

 

நன்மைத்தட்டு தாழ்ந்தது

 

கருணையின் வாசல்

 

திறந்தது.

 

கடவுளின் தரிசனம் கிடைத்தது..

 

0

 

 

நிறுத்தற்குறி

 

 

சிறகடித்துக் குதிக்கிறது

 

இந்தச் சொல்

 

என்னை எடுத்து ஒரு

 

கவிதை எழுதிக் கொள் என்று...

 

ஏற்கனவே

 

வண்ணத்துப் பூச்சியின்

 

இறக்கைகளில்

 

எழுதியவை எல்லாம்

 

எங்கோ பறந்து விட்டன..

 

நான் எழுதிய

 

வானத்தைச்சுருட்டி

 

காது குடைகிறேன்

 

அதில் எழுதிய

 

என் இள மைப்பேனா

 

உலர்ந்து விட்டது..

 

அறுபது பக்கம் வரை

 

என்னை வாசித்த அலுப்பில் மூடி ஒரு

 

மயானத்தின் மூலையில்

 

தூக்கி எறியக்

 

காலமும் முடிவு செய்த பின்னே

 

இனியும்

 

எதை எழுத...

 

யார் வாசிக்க....?

 

0

 

ஒரத்த பெருமஹா நொக்கு

 

 

பகளியில அடுக்கின

 

தல வெத்தில போல

 

மொகம்வாய்ச்சிருக்கி ண்டு

 

என்ன நடப்புஹா நொக்கு

 

கொளுந்தண்டு போல

 

மூக்கு வளைஞ்சிருக்கே

 

அந்தக் கெப்பரு நொக்கு

 

கொட்டப்பாக்கு போல

 

ரெண்டுகண்ணும்...அது

 

வெட்டி வெட்டி முழிச்சா

 

பாக்குச் சீவல் போல இருக்குண்டு

 

ஒரத்த பெரும நொக்கு

 

சுண்ணாம்புட கலருள

 

பல்லு பளீரெண்டு

 

தொலங்குது ண்டு

 

ஒரு எடுப்பு

 

 

சப்பித் துப்பின சாறு போல

 

செவத்த ஒதடு இருக்கி ண்டு

 

ஒரமா இருக்கி பெரும

 

கண்ணுல பொயில வெச்சிக்கிறுகிருக்க

 

வெக்கிறம்ண்டு ஒரு தும்ரு

 

ஏலக்காயும் சேத்துச் சப்பினாப்போல

 

கமகமக்கிற வாயி

 

எல்லாஞ் சேர்ந்து

 

என்ன ஒரத்த

 

பெருமஹா நொக்கு

 

பொறு..பொறு

 

ஒருநாளக்கி ஒன்னச்

 

சப்பித் துப்புவன் பாரு...

 

0

 

 

இரவில் நடமாடும் இரவு

 

 

இரவு இருளானதும்

 

எழுந்து விடுவேன்

 

இரவில் நடமாடும்

 

இரவோடு

 

இரகசியம் பேசிக்கொண்டிருக்க

 

இது நல்ல நேரம்

 

இரவே உன்னை

 

இருளாக்கியது யாரோ..

 

கறுப்புப் போர்வையை

 

உதறி என்னை மூடிய இரவு

 

நீண்ட மௌனத்தில் ஆழ்ந்தது

 

இரவு முழுவதும்

 

இருவரும் பேசிக்கொள்ளவில்லை

 

இருள் விலகி

 

இரவு போக எழுந்தது

 

எனக்கு என்ன பதில் என்றேன்

 

உண்மையில் நான்தான் ஒளி

 

என்னைப் பார்க்க

 

நீ சக்தி பெறவில்லை

 

இருள் போய்விட்டது

 

ஒளி வந்தது

 

இருள் போகவில்லை

 

ஒளி வரவில்லை...

 

0

 

காலண்டரின் கடைசித் திகதி

 

 

வேடிக்கை மனிதன்தான் நீ..

 

இதோ

 

கட்டளைக்காக

 

காத்திருக்கும் இஸ்ராபீலின்

 

வாயில் ஷ_ர்

 

ஒரு கணத்தில்ää

 

உலகின் இறுதி நாளின் திகதியைக்

 

கிழிப்பவன் வந்துவிடக்கூடும்..

 

வானம் பிளந்து வரும்

 

வானவரை நீ காணும் போதில்

 

பஞ்சாய் பறந்து வரும் மலைகளை

 

பார்த்து இரசிப்பாயோ...

 

அன்றி

 

உதிர்ந்து விழும்

 

நட்சத்திரங்களை

 

பொறுக்கிக் கொண்டிருப்பாயோ

 

தீ மூட்டப்படும் கடலில்

 

என்ன வேலை உனக்கு...

 

புவி அதிர்ந்து

 

புதைகுழிகள் திறக்கப்படும்போது

 

யார் யாரை வரவேற்க..?

 

போ..போ..

 

சுஜூதில் கிட...

 

0

 

 

எழு(த்)து

 

 

சுழியில் தொடங்கியதோர்

 

பேரெழுத்து...

 

அதன் பேர் தலையெழுத்து

 

பலருக்கு ஒற்றைச்சுழி

 

சிலருக்கு ரெட்டைச்சுழி

 

தலையெழுத்தை

 

விதி

 

தலையில் எழுதியதாலா

 

அது தலைவிதி...

 

தலையிலிருந்தாலும்

 

அது தொலையெழுத்து

 

வாசிக்க முடியாத

 

வலைப்பின்னல்

 

உருவமில்லாத உயிர் எழுத்து

 

மெய்தான்

 

மெய்யை எழுதும்

 

மெய்யெழுத்து

 

மெய்யை பொய்யாக்கும்

 

கையெழுத்து அது

 

எழுதி முடித்துக்

 

கையெழுத்திட்டதும்

 

எழுதுகோலின்

 

மை உலர்ந்தது...

 

எழுத்து

 

எழுந்து நடந்தது...

 

0

 

 

 

காலமான காலம்

 

 

காலத்தின் மீது

 

காலமே சத்தியம் செய்கிறது

 

முக்காலமும் தற்காலமே

 

எக்காலமும் இக்காலமே என்கிறது

 

காலத்தை திட்ட வேண்டாம்

 

நானே காலமாக இருக்கிறேன்

 

நானே காலமாக இறக்கிறேன்

 

காலத்துக்குää

 

காலம் சொன்னது

 

காலத்துக்குக் காலம்

 

காலம் செல்வதும் நானே...

 

புதியதோர்

 

காலமாகப் பிறப்பதுவும் நானே

 

ஆயின்

 

காலமானார் எனச் சொல்லாதீர்

 

அகால மரணம் எனவும் கூறாதீர்

 

காலம் எழுதுகிற கணக்கில்

 

கணக்கில்லாத காலங்கள் உண்டு..

 

 

காலா காலமாய்

 

காலத்தை அளப்போரே வருக

 

கால நேரம் கணிக்கக்

 

காலமாணி ஒன்று கொணர்க

 

காலம் கடக்கப்

 

பாலம் உண்டா சொல்வீர்?

 

காலம் கடந்த புறாக்மட்டுமே

 

காலம் கடந்தும் வாழ்கிறது..

 

காலாதி காலமாய்

 

காலாவதி ஆகாமல்

 

காலமாய் இருக்கும்

 

காலம் நான்...என உணர்வீர்.

 

 

நானே

 

காலமானால் காலம் ஏது?

 

0

 

 

இறை வர்ணத்தில் தோய்வீராக

 

வெள்ளத்தில் தத்தளிப்போரே

 

நூஹின் கப்பலுக்குள் செல்க

 

பிர் அவ்னுக்கு அஞ்சுவோரே

 

மூஸாவுடன்

 

பிளவுண்ட

 

நைல்நதிக்குள் இறங்குக..

 

நம்ரூத்தை எதிர்ப்போரே

 

இப்றாஹீமுடன்

 

நெருப்புக்குள் பாய்க....

 

பிலாத்துவுக்கு பயந்தோரே

 

ஈசாவுடன்

 

வானுலகில் மறைக...

 

என்னை அழைக்காதீர்கள்

 

நான் யூசு10பின் அமைச்சரவைக்குச்

 

செல்லப் போவதுமில்லை

 

தாவூத்துடன் மலைகளுக்கு ஏறி

 

சங்கீதம் பாடப் போவதுமில்லை

 

வர்ணங்களைப் போர்த்திக் கொண்டிருக்கும்

 

பிரபஞ்ச வெளியில் தோயப் போகிறேன்...

 

அங்கேயே கரைந்துவிடப் போகின்றேன்

 

இனித்

 

திரும்பி வரமாட்டேன்..

 

0

 

 

உள்ளங்கையில் உள்ளுணர்வு

 

 

மருதானியிட்டுச் சிவந்த

 

உள்ளங்கையைக் காட்டினாள் மகள்...

 

நல்லா இருக்கா வாப்பா...

 

அழகாய் இருக்குடா மகளே...

 

கலீரெனச் சிரித்தோடுகிறாள் மகள்....

 

உள்ளங்கை வட்டத்தில் நீ

 

உணர்த்தியது என்ன மகளே..

 

சுற்றி நீ வைத்த..அந்தச்

 

சின்ன வட்டங்கள் சொன்ன

 

செய்திகள் என்ன மகளே..

 

தொப்பி போட்ட உன் விரல்கள்

 

தொட்டுக்காட்டியது என்ன மகளே

 

விரல் கணுக்களின் கோடுகள்

 

விண்ட கதை அறிவேன் மகளே..

 

வாழ்வொன்று தேடித்தர

 

வக்கற்ற இந்த

 

வாப்பாவை மன்னித்து விடு மகளே....

 

0

 

நாளைக்குப் பெருநாள்

 

 

வானம்

 

விண்மீன் ஜரிகை உடுத்தி

 

பிறைச் சிமிக்கியும் அணிந்தது

 

குரோட்டன்கள்

 

மருதாணிக் கைகளை

 

விரித்துக் காட்டிச் சிரித்தன

 

வண்ணத்துப் பூச்சிகள் கூட

 

வர்ணச் செட்டைகள் மாற்றிப்

 

பறந்து திரிந்தன.

 

என் மகளும்

 

புதிதாகத்

 

தைத்துக் கொண்டிருந்தாள்

 

தாவணியில்

 

பழைய

 

பொத்தல்களை....

 

0

 

 

ஏக்கம்

 

 

முறைதவறிச் செய்த பாவ

 

மீட்சி பெறுவதெக்காலம்

 

கறை நீங்கி கல்பு குளிர்ந்து

 

களித்தாடுவது எக்காலம்

 

சிறை மீண்டு சிரம் நிமிர்த்திச்

 

சிறகடிப்பதுவும் எக்காலம்

 

குறையறிவு நீங்கி நான்

 

குன்றென நிமிர்வதெக்காலம்

 

பிறைவானம் கடந்து மேலேறிப்

 

பிரயாணம் போவதெக் காலம்..

 

அறைமுழுவதும் அகல் ஏற்றி

 

ஆனந்திப்பதுவும் எக்காலம்

 

மறையோதி மனம் மகிழ்ந்து

 

மலர்வதுவுமெக்காலம்..

 

நிறைகுருநாதர் கரம்பற்றி

 

நின்றொளிர்வதெக்காலம்.

 

இறைவர்ணத்தில் தோய்ந்து நான்

 

இன்புறுவதுவும் எக்காலம்.?

 

0

 

வழித்தடம்

 

1. தூது- கவியேடு - 1983

 

 கையடக்கக் கவிதைச் சிற்றேடுää 16 இதழ்கள். கல்முனை புகவம் வெளியீடு

 

2. வல்லமை தாராயோ - சிறுகதை தொகுதி - 2000

 

 கல்முனை புகவம் வெளியீடு

 

3. நட்டுமை - நாவல் - 2009

 

 தமிழ்நாடு காலச்சுவடு சஞ்சிகைää நடத்திய சு.ரா.நினைவு 75.’ நாவல் போட்டியில் முதற்

 

பரிசு பெற்றது - காலச்சுவடு வெளியீடு

 

4. வெள்ளிவிரல் - சிறுகதை தொகுதி-2011

 

 2011க்கான அரச தேசிய சாகித்திய விருதும்ää கிழக்குமாகாண சாகித்திய விருதும் பெற்றது.

 

 காலச்சுவடு வெளியீடு

 

5. கொல்வதெழுதுதல் 90 - நாவல் - 2013

 

 2013க்கான தமிழ்நாடு அரசின் 1000 பிரதிகளுக்கான நூலகஆணை பெற்றது.

 

 காலச்சுவடு வெளியீடு

 

6. அபாயா என் கறுப்பு வானம் - கவிதைகள் - மின்நூல் - 2015.

 

 பிரதிலிபி வெளியீடு

 

7. ஆழித்தாயே அழித்தாயே - சுனாமி காவியம் - 2017

 

 அபாபீல்கள் வெளியீடு

 

8. குறு நெல் - குறும்பாக்கள் - 2017

 

 பாவலர் பண்ணை வெளியீடு

 

9. தீரதம் - சிறுகதை தொகுதி - 2017

 

 ஜீவநதி வெளியீடு

 

10. வக்காத்துக்குளம் - குறுநாவல் - 2021

 

 அக்கினிக்குஞ்சு இணையம் நடத்திய அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த குறுநாவல் போட்டியில்

 

மூன்றாவது பரிசு பெற்றது - ஏறாவூர் கசல் பதிப்பகம் வெளியீடு.

 

11. முத்திரையிடப்பட்ட மது - கவிதைகள் - 2021 - அபாபீல் வெளியீடு

 

பத்தித் தொடர்கள் பத்தித் தொடர்கள் பத்தித் தொடர்கள்

 

வானவில்லே ஒரு கவிதை கேளு - குறுநாவல் - 2005 - ஈழநாதம் - வார இதழ்

 

ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது - பாவலர் பஸீல் காரியப்பரின் படைப்புலகில்

 

சஞ்சரித்தல் - 2009 - விடிவெள்ளி வார இதழ்.

 

விழித்திரையில் விரியும் வெண்திரை-ஆங்கிலத் திரைப்படப் பார்வை - 2009 - நல்லுறவு.

 

இறுவெட்டு

 

காகித உறவுகள்.

 

இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான

 

12 வானொலி நாடகங்களின் (1987-1989) தொகுப்பு.

 

 (பிரான்ஸ் தமிழ் ஒலிபரப்பு நிறுவனமும்ää தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய

 

அகில உலக வானொலி நாடகப் போட்டியில் 3ஆவது பரிசுபெற்ற காகித உறவுகள்

 

என்னும்ää நாடகமும்ää முஸ்லீம் சேவையில் சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பப்படட ஒரு

 

கிராமத்தின் கவிதை என்ற நாடகமும் உள்ளடங்கியது.)